திருவள்ளுவர் அறிவுக்கடல்.. எந்த சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்.. வைரமுத்து
சென்னை: திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல்; அவரை எந்த சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள் என சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" 'கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?"

"அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்" என கூறியிருந்தது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
அத்துடன் திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அந்த படம்தான் சமூக ஊடகத்தில் கடும் விமர்சனத்துக்குக் காரணமாகி உள்ளது. பாஜக பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டு இருந்தது.
திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டு இருந்தது. இதற்கு பதிலடியாக பாஜக திருவள்ளூவரை அவமதித்து விட்டதாக டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் "திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்" என கவிஞர் வைரமுத்துவும் கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல்.
— வைரமுத்து (@vairamuthu) November 3, 2019
அவரை எந்தச் சிமிழுக்குள்ளும்
அடைக்கப் பார்க்காதீர்கள்.#Thiruvalluvar
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications