“எங்களுக்கு வாய்த்த இஸ்லாமிய காந்தி நீங்கள்!” அப்துல் கலாம் பிறந்த தினத்தில்.. வைரமுத்து புகழஞ்சலி!
சென்னை: இந்தியாவுக்கு ஒரு நியூட்டன் என்று கொண்டாடப்பட்டவர்தான் முன்னாள் குடியரசுத் தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான அப்துல் கலாம். இன்று அவருடைய பிறந்த தினம். தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் அவரது பிறந்த தினத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, அப்துல் கலாமுக்கு கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

"படகுவிடும் குடும்பம்
உங்களுடையது
நீங்களோ
ஏவுகணை விடுத்தீர்கள்
வடலூர் வள்ளலாரும்
நீங்களும் ஏற்றிய
அக்கினி மட்டும்
அணைவதே இல்லை
எங்களுக்கு வாய்த்த
இஸ்லாமிய காந்தி நீங்கள்
ஜனாதிபதி மாளிகையில்
கைப்பெட்டியோடு நுழைந்து
கைப்பெட்டியோடு வெளிவந்த
கர்ம வீரரே!
மீண்டு வரும்போது
அந்தப் பெட்டிக்குள்
ஒன்றும் இல்லை என்பதில்
உண்மை இல்லை
130 கோடி
இந்திய இதயங்களை
அந்தச் சின்னப் பெட்டிக்குள்
சிறைகொண்டு வந்தீரே
அப்துல் கலாம் அய்யா
அழியாது உமது புகழ்;
அது இந்திய வானத்தில்
எழுதப் பட்டிருக்கிறது"
படகுவிடும் குடும்பம்
— வைரமுத்து (@Vairamuthu) October 15, 2025
உங்களுடையது
நீங்களோ
ஏவுகணை விடுத்தீர்கள்
வடலூர் வள்ளலாரும்
நீங்களும் ஏற்றிய
அக்கினி மட்டும்
அணைவதே இல்லை
எங்களுக்கு வாய்த்த
இஸ்லாமிய காந்தி நீங்கள்
ஜனாதிபதி மாளிகையில்
கைப்பெட்டியோடு நுழைந்து
கைப்பெட்டியோடு வெளிவந்த
கர்ம வீரரே!
மீண்டு வரும்போது
அந்தப்… pic.twitter.com/rRiy2Kj3Lc
என்று கவிதை மூலம் அப்துல் கலாமுக்கு வைரமுத்த புகழஞ்சலி செலுத்தியுள்ளார். வைரமுத்துவின் கவிதைகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications