மூச்சை நிறுத்திக்கொண்டதா மும்பைக் குயில்? போய் வா பாட்டரசி! ஆஷா போஸ்லேவுக்கு வைரமுத்து இரங்கல்
சென்னை: இசைக்குயில் ஆஷா போஸ்லேவின் மறைவு, திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், அவரது மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

ஆஷா
மறைந்துற்றாரா!
பறந்து விட்டாரா
பாதி லதா?
மூச்சை நிறுத்திக்கொண்டதா
மும்பைக் குயில்?
வயதைத்
தீர்மானிக்க முடியாத
தீங்குரல்
சொற்களுக்கு வலிக்குமென்று
வருடிவிடும் மயிலிறகு மனசு
இந்திய மொழிகளையெல்லாம்
உள்வாங்கி உச்சரித்த உதடு
இனி இல்லையா?
நனைந்த துணியாய்க்
கனக்கிறது இதயம்
"வெண்ணிலா
வெண்ணிலா
வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்"
அந்தக் குரல் வசீகரத்தால்
முதல் மீசை முளைத்தது
என் வார்த்தைகளுக்கு
போய்வா பாட்டரசி!
உன் குரல்
பாடிக்கொண்டே இருக்கும்
இந்தியக் காற்றில்
என்றென்றும்"
என தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். திரைத்துறையினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications