குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000.. பெண்களின் சுதந்திரத்திற்கு பெருமை சேர்த்த முதல்வர்.. வைரமுத்து
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு
சென்னை: தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதை அடுத்து கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைய தினம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் அப்போது மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவித்தார்.

மேலும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வரவேற்றுள்ளார்கள். எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு என சொல்லிவிட்டு தற்போது பட்ஜெட்டில் தகுதி வாய்ந்தவர்களுக்கு என சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

சொன்னதைச் செய்தார்
முதல்வர்
உரிமைத்தொகை
அறிவித்துவிட்டார்
சுயமரியாதையின்
மறுபெயர் பணம்
சுதந்திரத்தின்
மறுபெயர் பணம்
ஒரே அறிவிப்பில்
பெண்களின்
சுதந்திரம் சுயமரியாதை
இரண்டுக்கும்
பெருமை சேர்த்திருக்கிறார்
வாழ்த்துவோம் முதல்வரை
போகப் போக இதை
இந்தியா பின்பற்றும்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications