ஸ்விட்சர்லாந்தில் துப்பாக்கியுடன் வைரமுத்து! கவிதை போர் வெடிக்கட்டும்! நெட்டிசன்கள் கருத்து
சென்னை: ஸ்விட்சர்லாந்தில் எடை குறைந்த, இயக்க எளிதான எஸ்ஐஜி 550 துப்பாக்கியை ஏந்தி கொண்டு கவிஞர் வைரமுத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை தன்னால் கற்க முடியவில்லையே என்றும் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஏந்தியிருக்கும்
எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி
ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது
மற்றும் கடந்தது
எடை குறைந்த
இயக்க எளிதான
துல்லியத் துப்பாக்கி இது
சுவிட்சர்லாந்து
பள்ளிக் கல்வியில்
இது வீரப் பயிற்சிக்கு
வினைப்படுகிறது;
ராணுவ சேவைக்கு
விதையிடுகிறது
இந்தப் பயிற்சி
தன்னம்பிக்கை ஊட்டித்
தன்னெழுச்சி தருவதாக
நண்பர் கல்லாறு சதீஷின் மகள்
இனிஷா தெரிவித்தார்
தோட்டாத் தூணியை நிரப்புதல்
நெம்புதல்
விசை முடுக்கல்
சுடுகுறி பார்த்தல்
சுடல் என்பன
இதன் படிநிலைகள்
விருப்பமுள்ளவர்கள்
பயிற்சிபெறக்
கல்வித் திட்டங்கள்
கைதட்டி வரவேற்க வேண்டும்
தோழன் செய்யாததைத்
துப்பாக்கி செய்யும்
எனக்கு இந்தப் பயிற்சி
இல்லையே என்று - நான்
குறைமனிதனாய்க்
குமுறுகிறேன்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை தூரிகை ஆக்கி
தோட்டாக்களால் துளையிடுங்கள்
கவிதை போர் ஒன்று வெடிக்கட்டும்! இவ்வாறு ஒரு நெட்டிசன் கவிதை நடையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையோடு போராடுகிறோம்
இனத்தோடும் போராட
வேண்டுமா
அதற்குத் தான் ஆயுதங்களா
இந்தத் துப்பாக்கி விளம்பரம்
நமக்கு வேண்டாமே
'பூ உலகமில்லை _இது
போர் உலகமடா
யார் கைகளுக்கும்_யுத்தம் தெரிந்தே இருக்குதடா
உத்தமன் வயிற்றில்
செத்ததை எடுத்தால்
மொத்தமும் குத்தமடா _ ஐயோ
எத்தனை யுத்தமடா'
இவ்வாறு ஒரு நெட்டிசன் கவிதை நடையில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications