ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’.. நெகிழ்ச்சியுடன் சொன்ன வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் 12வது மொழியாக ஒடியாவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.
கவிஞர் வைரமுத்து எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைகை அணை கட்டப்பட்ட போது, அங்கிருந்த காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை கவிஞர் வைரமுத்து எழுதினார்.

வைகை அணை பகுதி மக்கள், மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் வைரமுத்து. இந்த நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஒடியா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை ஒடியா மொழியில் அஜய் குமார் பட்நாயக் மொழிபெயர்த்திருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
கள்ளிக்காட்டு இதிகாசம்
ஒடியா மொழியில்
வெளிவந்துவிட்டது
ஒரிசாவின்
அதிகார மொழியாகவும்
ஜார்கண்டின் இரண்டாம்
அதிகார மொழியாகவும்
விளங்குவது ஒடியா
13ஆம் நூற்றாண்டில்
இலக்கிய மொழியாக
அறியப்பட்ட ஒடியா
5 கோடி மக்களால் பேசப்படுவது
புதிதாக வளர்க்கப்பட்ட
உரைநடையை விடப்
பாரம்பரியமான கவிதைமொழி
கொண்டது ஒடியா
பெரும் கவிஞர் சரள தாசர்,
சச்சிதானந்த ரௌத்ரே,
குருப்பிரசாத் மொகந்தி,
சௌபாக்ய மிஸ்ரா போன்ற
மூத்த படைப்பாளிகளாலும்
பக்கீர் மோகன் சேனாபதி,
மனோஜ் தாஸ், பிரதீபாராய் போன்ற
நவீனப் படைப்பாளிகளாலும்
செழுமைப் படுத்தப்பட்ட
ஒடியா மொழியில்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கலப்பது குறித்துப்
பெருமிதம் அடைகிறேன்
அஜய் குமார் பட்நாயக்
மொழிபெயர்த்திருக்கிறார்
இந்திய மொழிகளில்
கள்ளிக்காட்டு இதிகாசத்தின்
பன்னிரண்டாம் மொழிபெயர்ப்பு
இது.
நன்றி: சாகித்ய அகாடமி
எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications