வளர்பிறை அஷ்டமி வேற.. யார் அந்த 15 பேர்? அதிமுக வேட்பாளர் லிஸ்ட் வெளியாகிறதா? அந்த ஒரு "பெண்" யார்?
சென்னை: இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மிக முக்கியமான அரசியல் நகர்வு அரங்கேற உள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்றைய நன்னாளில் வெளியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்த வருவது ஒட்டுமொத்த அரசியலையும் உற்றுநோக்க வைத்துள்ளன.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், எடப்பாடியார் எடுக்கப்போகும் இந்த முடிவு மற்ற கட்சிகளுக்கு ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது..
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார் என்றால், அதில் வளர்பிறை, அஷ்டமி மற்றும் பஞ்சமி போன்ற சுப நாட்களை தேர்ந்தெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்..

அதே பாணியை அப்படியே பின்பற்றி, எடப்பாடி பழனிசாமியும் அதே போன்ற ஒரு மங்கலமான நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார்..
யாரந்த 15 பேர்
குறிப்பாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளும் வளர்பிறை அஷ்டமியும் இணைந்து வரும் இன்றைய நாளை அதாவது பிப்ரவரி 24 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக கருதுகிறார்.. இந்த நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்பது தொண்டர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது..
இந்த வேட்பாளர் பட்டியல் குறித்த ஒரு பெரிய சஸ்பென்ஸ், அரசியல் வட்டாரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.. முதற்கட்டமாக சுமார் 15 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.. அந்த 15 அதிர்ஷ்டசாலிகள் யார்? அவர்கள் எந்தெந்தத் தொகுதிகளில் களம் இறங்கப்போகிறார்கள்? என்பதுதான் இப்போது டாப் நியூஸ்..
பெண் வேட்பாளர் லிஸ்ட் யார்
இதில் கட்சியின் முக்கியத் தூண்களாகத் திகழும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.. அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், இந்த லிஸ்ட்டில் ஒரு பெண் வேட்பாளரின் பெயரும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.. இந்த பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு, இதற்காகத் திருப்பதி கோவிலில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன..
இன்றைய தினத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, 'சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்' என்ற புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமையகத்தில் இன்று வெளியிடுகிறார்..
புத்தக வெளியீடு
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் வேட்பாளர் பட்டியல் மற்றும் புத்தக வெளியீடு என இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒன்றாக இணைந்திருப்பது, அதிமுகவினரைத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடத் தூண்டியுள்ளது.. எடப்பாடியாரின் இந்த அதிரடித் திட்டம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளதோடு, தேர்தல் கிலியை இப்போதே ஆரம்பித்து வைத்துள்ளது..
ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் அதே வேளையில், இந்த 15 பேர் கொண்ட சஸ்பென்ஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் மூலம் அதிமுக தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகவும் அதிரடியாகவும் இன்று தொடங்குகிறது.. அந்த 15 பேர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்னும் சில மணி நேரங்களில் உடையப் போகிறது.. இது தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றத்திற்கான ஒரு முக்கியத் தொடக்கப் புள்ளியாக அமையும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications