காதலர்களே! இந்த 5 நிறங்களில் ஆடை அணிந்தால் ஃபெவிகால் போட்டு ஒட்டுனா மாதிரி ஸ்ட்ராங்காகும் லவ்வு!
சென்னை: காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது வெள்ளிக்கிழமை அன்று இந்த தினம் வருகிறது. இதையொட்டி காதலர்கள் எந்த நிறத்தில் உடைகளை அணிந்தால் அவர்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகும் என்பதை பார்க்கலாம்.
வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஆண்டுதோறும் இதே தேதியில்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இந்த வாரமே பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை கேட்டுவிட்டனர்.

கல்லூரி மாணவர்களும் காலேஜை கட் அடிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை யோசித்து வருகிறார்கள். பொதுவாகவே நட்பு, காதல், கணவன்- மனைவி என எந்த உறவாக இருந்தாலும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரும்.
அதன் வீரியத்தை பொருத்து இருவரும் சமாதானமாவதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பதும் இருக்கும். அந்த வகையில் காதல் ஜோடிகளுக்கு இடையேயும் சண்டைகள் வரும். அதில் காத்திருக்க வைத்துவிட்டு நேரத்திற்கு வராமல் இருப்பது, இல்லாவிட்டால் வராமலேயே இருப்பது, போன் காலை எடுக்காததற்கு, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் போடாததற்கு என சண்டைகள் தொடங்கும்.
எது எப்படி இருந்தாலும் சண்டையிட்டவர்கள் காதலர் தினத்தன்று ஒன்று சேர்ந்து விடுவார்கள். இவர்களுக்குள்ளான பாண்டிங் மேலும் அதிகரிக்க ஜோதிடர்கள் சொல்லும் ஒரு டிப்ஸை பின்பற்றுங்கள்.
5 மங்களகரமான நிறங்களை காதலர்கள் அணிந்தால் அவர்களுக்குள்ளான உறவு வலுவடையும். அவை சிவப்பு, பிங்க், வெள்ளை, லாவண்டர், ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களாகும்.
சிவப்பு நிறம்- இந்த நிற ஆடையை அணிவது பேரார்வத்தையும் காதலையும் அதிகரிக்கும். இதயத்துடன் தொடர்புடையது, காதலுக்கு சின்னமாக அமைந்துள்ளது. எனவே சிவப்பு நிற ஆடையோ, சர்ட்டோ அல்லது ஏதாவது ஆபரணங்களோ வைத்திருந்தால் ஜோடிகளுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
பிங்க் நிறம்: இது பார்ப்பதற்கு இதமான நிறமாகும். இது அளவுக்கடந்த காதலையும் ஆசையையும் பிரதிபலிக்கிறது. பிங்க் நிற ஆடையை அணிவதால் காதல் ஜோடிகளுக்கு இடையே அன்னியோன்யம் வேகமாக அதிகரிக்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவும் அவரவர் ஆசைகளை தெரிந்து கொள்ளவும் உதவும்.
வெள்ளை நிறம்: வெள்ளை என்பது ஒற்றுமை மற்றும் சுத்தத்தின் வெளிப்பாடு. இந்த நிறத்தில் ஆன ஆடைகளை அணிந்தால் காதலர்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும். தங்கள் காதலுக்கு வரும் எதிர்ப்பை இருவரும் இணைந்து சமாளிக்கவும் உதவும்.
லாவண்டர்: இந்த நிறமானது காதலர்களிடையே பரஸ்பரம் புரிதலை ஊக்குவிக்கும். நம்பிக்கையை வலுப்படுத்தும். தனது இணை என்ன நினைக்கிறார் என்பதை உள்ளுணர்வை பயன்படுத்தி அறிய உதவும். வாழ்க்கையின் போராட்டங்களை மிகவும் எளிதாக்கவும் தெளிவாக்கவும் உதவுகிறது.
ரோஸ் கோல்டு: ரோஸ் கோல்டு நிறமானது பாராட்டு, அரவணைப்பை குறிக்கும் நிறமாகும். இதனால் அவர்களின் உறவில் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். ஒருவர் மீது ஒருவர் பக்தி உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.
எனவே இந்த 5 நிறங்களை மறக்காமல் அணியுங்கள் காதலர்களே! இதுகுறித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications