ரம்மி விளம்பரத்தில் கும்மி சங்கீதா! இப்போ வைஷ்ணவியை வம்புக்கு இழுத்து! ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்!
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விமர்சத்திற்கு உள்ளானார் வள்ளி கும்மி மூலம் பிரபலமான சங்கீதா. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக கூறிய அவர் திமுகவில் சேர்ந்த வைஷ்ணவியை விமர்சித்துள்ளதால் மீண்டும் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்துவிட்டு இப்போது பேச என்ன காரணம் என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் பல்வேறு கிராமிய கலைகள் இருந்தாலும் தற்போதைக்கு இன்ஸ்டாகிராம் தொடங்கி எந்த சமூக வலைதளத்தை திறந்தாலும் ட்ரெண்டிங்கில் இருப்பது வள்ளி கும்மி தான். தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் குறிப்பாக கோவை, ஈரோடு, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களில் மிகப் பிரபலமானது.
வள்ளி கும்மி முருகனைப் பற்றியும், தங்கள் வாழ்வியலை பற்றியும் வள்ளி கும்மி கலை மூலமாக நடனத்தோடு எடுத்துச் செல்வார்கள். ஆரம்பத்தில் அதற்கு போதிய வரவேற்பு இல்லை என்றாலும் தற்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வள்ளி கும்மி குழு ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் சங்கீதா. தனது கணவரை பார்த்து நாக்கை நீட்டி கண்ணடிக்க அதனை அவர் வீடியோவாக எடுத்து போட்டு இருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் பிரபலமான தொடர்ந்து பல்வேறு யுட்யூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு வேறு பாடல்களுக்கு நடனமாட தொடங்கினார். தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கினார். இதை அடுத்து கலைக்காக வாழ்ந்தவர் வாழ்பவர் என பாராட்டிய நெட்டிசன்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததும் விமர்சிக்க தொடங்கினர்.
உச்சபட்சமாக தனிமனித தாக்குதலும் திருநங்கை போல் இருக்கிறார் என்ற விமர்சனமும் அவரை அழ வைத்துவிட்டது, தொடர்ந்து இது தொடர்பாக பல்வேறு யூட்யூப் சேனல்களில் பேசி தன்னை ட்ரோல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த அவர் தனது கணவர் தான் பேமஸ் ஆனதால் தன்னை விட்டு விட்டு சென்று விட்டார் என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறார் சங்கீதா.
அதாவது கோவையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான வைஷ்ணவி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்திருந்தார். தற்போது தவெக பாஜக போல ஆகிவிட்டது எனக் கூறி அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றியிடம் பேசியுள்ள வள்ளி கும்மி சங்கீதாவுக்கு வைஷ்ணவி துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் திமுகவுக்கு சென்றது நல்லது தான் என பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் எத்தனையோ கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாய்ப்புக் கொடுங்கள் என்ற ரீதியில் அவர் பேசியிருந்தார். இதை அடுத்து அவரது அரசியல் புரிதலின்மை குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தவெகவில் லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டினின் உறவினர் இருக்கும் நிலையில் ரம்மி விளம்பரத்தில் நடித்து பலரின் வாழ்க்கை பறிபோக காரணமாக இருந்த வள்ளி கும்மி சங்கீதா தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருப்பது ஒன்று ஆச்சரியம் இல்லை என்றும், சேவை செய்த வைஷ்ணவி திமுகவில் இணைந்தது தவறில்லை எனவும் கூறி வருகின்றனர். ஒருவேளை வேண்டுமென்றே விளம்பரத்திற்காக வைஷ்ணவி இதுபோன்று சேனல்களில் பேட்டி கொடுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications