Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வள்ளுவர் மறை வைரமுத்து உரை'.. திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்தார் கவிஞர் வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார். 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.

உலகளவில் பைபிளுக்கு அடுத்து பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பு கொண்டது வள்ளுவர் எழுதிய திருக்குறள்.

Vairamuthu Thirukkural

இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் இருக்கின்றன.

இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் சில அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் சுவை தரக்கூடியதாக உள்ளது. தற்போது, தமிழறிஞரான கவிஞர் வைரமுத்து, தனக்கே உரித்தான கவித்துவ நடையில் விளக்க உரை எழுதியிருக்கிறார். இதுதான் தமிழுலகம் காண உள்ள திருக்குறளுக்கான அண்மைய காலத்து உரையாகும். வைரமுத்துவின் கவிச் சுவையுடன், உலக பொதுமறையின் பெருஞ்சுவை சேர்வதால், இதை சுவைக்க, உலக தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 'உலகத் தமிழ் உள்ளங்களே வணக்கம். திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன்; கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது.

ஈராயிரம் ஆண்டை இருபது வயதிற்கு எடுத்துச் செல்வது; அறமும், பொருளும் ஞானப் பொருளாகவும், இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று. நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன்.

நூலின் தலைப்பை நாளை (இன்று) வியாழக்கிழமை காலை 8 மணிக்கு இதே தளத்தில் அறிவிக்கிறேன். நீங்கள் என்மீது வீசும் ஒவ்வொரு பூவிலும் குருதி சிலிர்க்கும்; உறுதி பிறக்கும். திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம் வாழ்க வள்ளுவம்; வெல்க குறள்'" இவ்வாறு கூறியிருந்தார்.

இதன்படியே நூலின் தலைப்பை வைரமுத்து, இன்று காலை அறிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட வீடியோவில், "வணக்கம், திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரை எழுதி முடித்திருக்கிறேன். இன்று தலைப்பை அறிவிக்க போகிறேன்.. தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேய பாவணரும், புலவர் குழந்தையும், மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

1333 அருங்குறளுக்கும் உரை எழுதி முடித்த உடன் நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறேன். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டிருக்கிறேன். உங்கள் வாழ்த்து பூக்களை நான் வேண்டி நிற்கிறேன்.. நீங்கள் என் மீது வீசப்போகும் ஒவ்வொரு பூவும், என் குருதி சிறுக்க வைக்கும்.. என் உறுதியை உயர்த்தி பிடிக்கும். இன்னும் தமிழுக்கு செய்ய வேண்டும் என்ற வேட்கைக்கு வேகம் கொடுக்கும். வாழ்க திருவள்ளூவர்! வளர்க வள்ளுவம்! வள்ளுவர் மறை, வைரமுத்து உரை" இவ்வாறு கூறியுள்ளார்.

வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்று பெயரிடப்பட்ட திருக்குறள் உரை குறித்து கவிப்பேரரசு வைரமுத்து கூறும் போது, "திருக்குறளுக்கு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புதிய உரை நவீனமானது; டிஜிட்டல் தலைமுறைக்கானது; கணினித் தலைமுறைக்குக் கனித்தமிழில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத்தமிழில் இயங்குவது; இன்பத்துப்பால் கவிதைப் பொருளாய் விளங்குவது" என்றார். 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' ஜூலை மாதம் நூலாக வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+