வால்பாறை அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் மரணம்
சென்னை: வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார். சிட்டிங் எம்.எல்.ஏ மறைவால் அந்த தொகுதி காலியாகியுள்ளது.

வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி (வயது 60). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமுல் கந்தசாமியை மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்எல்ஏ, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உயிரிழந்தச் செய்தி கேட்டு குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். அதிமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.க. அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல் கந்தசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் அமுல் கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் எப்போது?
ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ உயிரிழந்துவிட்டால், இதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையமும் அந்தத் தொகுதியை காலியானதாக அறிவிக்கும்.
ஒரு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே வால்பாறை தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications