வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு.. விரைவில் இடைத்தேர்தல் நடக்குமா?
சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வந்தவர் கந்தசாமி (60). தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதில் 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராகவும் அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், உடல் உறுப்பு தொற்றினால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானதையடுத்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நடைமுறை.
ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாத காலமே இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனவே, அதுவரை எம்.எல்.ஏ இல்லாத தொகுதியாகவே வால்பாறை சட்டமன்றத் தொகுதி இருக்கும் எனத் தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications