தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்!
Recommended Video
சென்னை: தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே வாழ்த்துகள் என அக்கட்சி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனால் அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு வானதி சீனிவாசனுக்கா? என்கிற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் போட்டியிட்டு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தவர் தமிழிசை.

ஆனால் தமிழகத்தில் பாஜக என்கிற கட்சி இருப்பதை ஊடக பேட்டிகள் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தவர் தமிழிசை. உட்கட்சியில் மிகக் கடும் எதிர்ப்புகள் இருந்த போதும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என இடைவிடாமல் பேசியதால்தான் தமிழிசைக்கு பாஜக மேலிடம் இப்படி ஒரு மதிப்பளித்திருக்கிறது.
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 2, 2019
தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்...
அனைவருக்கும் #விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் pic.twitter.com/7y8LDt3k7d
தமிழிசைக்கு இணையாக பாஜகவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தியவர் வானதி சீனிவாசன். மேற்கு மண்டலத்தில் தமது செல்வாக்கை வெளிப்படுத்த ஒவ்வொரு முறையும் முயன்று வருகிறார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஆதரவாளர்களின் நீண்டநாள் ஆதங்கம்.
இந்நிலையில் தமிழிசைக்கு அடுத்து யார் தமிழக பாஜக தலைவர் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வானதி சீனிவாசன் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவாளர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இப்பதிவில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே! வாழ்த்துகள் என அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பதிவு செய்து வருகின்றனர். இதனால் வானதி சீனிவாசனுக்குத்தான் தமிழக பாஜக தலைவர் வாய்ப்பு கிடைக்குமோ என்கிற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
மாரிதாஸ் கைது! திமுக அரசின் பாணியையே தவெகவும் பின்பற்றுகிறதே! வானதி கண்டனம்












Click it and Unblock the Notifications