காவல்துறை முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? கேட்கிறார் வானதி
வானதி சீனிவாசன் சின்னசேலம் மாணவி விவகாரம் குறித்து திமுகவை விமர்சித்துள்ளார்
சென்னை: ஒரு சாதாரண விசாரணைக்குக்கூட பொதுமக்கள், போலீசாரை அணுகுவதற்கு யோசிக்ககூடிய சூழல் உள்ளது.. காவல்நிலையங்களை நாட அஞ்சும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது...என்று பாஜகவின் வானதி சீனிவாசன், திமுகவை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார்.
Recommended Video
சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. இது தொடர்பான வழக்கு இனறு நீதிமன்றத்தில் வர உள்ளது.

பதற்றம்
எனினும், பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்ததுடன், போலீசாரின் வாகனங்களுக்கும் சேர்த்து தீ வைத்தனர்.. தாக்குதலையும் தொடர்ந்தனர். இதனால் நேற்றைய தினம் பெரும் பதற்றமும், கலவரமும் ஏற்பட்டது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாநில அரசை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் கருத்து சொல்லி உள்ளார்.

நயினார் நாகேந்திரன்
சென்னை அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக வானதி சீனிவாசனும், நயினார் நாகேந்திரனும் பங்கேற்று விளக்கம் தந்தனர்.. பிறகு, வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது: "கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது போன்ற சம்பவம் முதல் முறை கிடையாது.. தமிழகத்தில் லாக் அப் மரணங்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஓபிஎஸ்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இம்மாதிரியான விஷயங்களில், எப்படி நடந்து கொண்டார்கள்? இப்போது காவல்துறை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று தெரியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறார்கள்... ஒரு சாதாரண விசாரணைக்குக்கூட பொதுமக்கள், போலீசாரை அணுகுவதற்கு யோசிக்ககூடிய சூழல் உள்ளது.. காவல்நிலையங்களை நாட அஞ்சும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது... குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டு இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் தரப்பிடமும் ஆதரவு கோரி இருக்கிறோம்" என்றார் வானதி.

சாடல்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது.. அனைத்து பாஜக தலைவர்களும் திமுக அரசை கடுமையாக சாட ஆரம்பித்துள்ளனர்.. மாணவி இறந்தவுடனேயே விசாரணையை முடுக்கி விட்டிருக்க வேண்டும், அந்த குடும்பத்தினரிடம் அரசு தரப்பு அல்லது காவல்துறை, நீதி நிலைநாட்டப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்க வேண்டும், 3 நாட்கள் நிலைமையின் தீவிரத்தை உணராமல், அலட்சியமாக இருந்து. விவகாரத்தை கொழுந்து விட்டு எரிய வைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை பாஜக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications