தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் – விஜய்க்கு வானதி சீனிவாசன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு வாய்ப்பில்லை ராஜா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலாய்த்துள்ளார். மேலும், விஜய்யின் விவாகரத்து வழக்கு குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட கூட்டணி, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி, தவெகவினர் திணறி கொண்டிருக்கிறார்க்ள.

Vanathi Srinivasan

துபாயில் சிக்கி தவித்தவர்கள்

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உலகின் பல பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்றவர்களும் இந்த நிலைமையில் சிக்கி அவதிப்படுகிறார்கள். வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

துபாயில் சிக்கியிருந்த கோவையைச் சேர்ந்த 18 பேர் தங்களை மீட்க உதவி கோரி தொடர்பு கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தின் மூலம் அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர். அவர்கள் பகிர்ந்த வீடியோ காட்சிகள் அங்குள்ள பதற்றமான சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றன.

மாணவி பாலியல் வழக்கு

ஒரு நாட்டின் பிரதமர் வெளிநாடு செல்லும் போது அந்த நாட்டின் போர் ரகசியங்களை பகிர்ந்து கொள்வார்களா. போர் தொடர்பான வியூகங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டார்கள். இந்திய எல்லைக்குள் ஏதேனும் தாக்குதல் நடந்தால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கில் உழைத்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிரச்சனையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களையும் பாராட்டுகிறேன். கோவையில் சமீபத்தில் 82 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயதானவர்கள் வீட்டில் தனியாக வாழ்வது பாதுகாப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

விஜய் மீது விமர்சனம்

சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. விஜய் அளித்துள்ள வாக்குறுதிகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

விஜயின் ஸ்பெஷல் வாக்குறுதிகளை வரவேற்கிறேன். அரசியல் கட்சி தலைவர்கள் 30 சதவீதம் கமிஷன் அடிக்காமல் இருந்தால் இதை செய்துவிடலாம். ஆனால் விஜய் தனித்துஆட்சி அமைத்து அதை நிறைவேற்ற வாய்ப்பில்லை ராஜா. அதேநேரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றாதது. பாஜக தமிழ்நாட்டில் வலுவாக வந்துவிட்டது" என்றும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+