கூடுவாஞ்சேரி டூ வண்டலூர்.. ஒத்திவாக்கத்தில் எதிரொலிக்கும் "டப்பு டப்பு".. மாஸ் போட்டி.. சபாஷ் டிஜிபி
வண்டலூர்: தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று நடக்கும் நிறைவுநாள் போட்டியானது மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளி.. இங்கு ஒவ்வொரு வருடமும், தமிழக அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுவது வழக்கம்.
டிஜிபி: அந்தவகையில், இந்த வருடமும் போட்டி துவங்கி உள்ளது.. நேற்று தொடங்கிய போட்டி இன்றும் நடக்கிறது. இந்த இரண்டு நாட்கள் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை தமிழக டிஜிபி துவங்கி வைத்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நான்கு மண்டலங்கள் மற்றும் தனிப்பிரிவு அனைத்து காவல் ஆளிநர்களுக்காக நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் தேர்வான 11 அணிகளில் 198 ஆண் காவலர்களும், 44-பெண் காவலர்களும் என மொத்தம் 242 வீரர்கள் இந்த 2 நாள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதன் இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட உள்ளது..
டிஜிபி துவக்கி வைத்தார்: நேற்றைய தினம், போட்டியின் துவக்க நாளில் ரைபில் பிரிவில் 100 யார்ட்ஸ் முதல் 350 யார்ட்ஸ் வரை போட்டிகள் நடைபெற்றன.. இதனை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டு போட்டியை துவக்கி வைத்திருந்தர்.. அவருடன், ஏடிஜிபி ஜெயராம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய் பிரணீத் மற்றும் காவல் அதிகாரிகள் காவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போட்டியை துவங்கி வைத்தபிறகு செய்தியாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி தந்திருந்தார். அப்போது, மாநில அளவிலான காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்..
அதிக ஆர்வம்: மேலும், கடந்த ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் தமிழக காவல்துறை வீரர்கள் மத்திய படை சார்ந்த பி எஸ் எஃப், சி ஆர் எஃப் ஆகிய படைகளை வென்றதாகவும், அஸ்ஸாம் ரைபில் பிரிவில் தோல்வி அடைந்ததை இந்த ஆண்டு அந்த அணியை வெற்றி பெறுவார்கள் என்றும் டிஜிபி நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய தினம் போட்டியாளர்கள் யார் என்பதை அறிய காவல்துறையே ஆர்வம் கொண்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. இந்த 2 நாள் துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications