வண்டலூர் டூ மதுரவாயல்.. சென்னையில் நாளைக்கு இந்த பக்கம் போகாதீங்க.. ரூட்டை மாற்றிய போக்குவரத்து துறை
சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,380 சிறப்பு பஸ்களை தமிழக போக்குவரத்து துறை இயக்கி வருகிறது.. மேலும் தொடர் விடுமுறையால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக சென்னையின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், அதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்களை அறிவித்து இயக்கியும் வருகிறது..

அந்தவகையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,380 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதில் பயணம் செய்வதற்காக 90000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை கூறியிருந்தது.
தொடர் விடுமுறை
அதாவது வெள்ளிக்கிழமை 22,735 பயணிகளும் சனிக்கிழமை 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 11,908 பயணிகளும், இன்று திங்கட்கிழமை 8,070 பயணிகளும், நாளை செவ்வாய்க்கிழமை 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கிறார்களாம்..
தற்போது தொடர் விடுமுறையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை தாம்பரம் டிராபிக்
இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்..
அதில், "ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்லும் வாகனங்களின் நெரிசலை தவிர்க்க நாளை (செவ்வாய்க்கிழமை) பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
சென்னை போக்குவரத்து மாற்றம்
அதன்படி பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக தாம்பரம் மாநகர போலீஸ், பெருநகர சென்னை போலீஸ் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனரகத்துடன் இணைந்து முக்கிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கனரக வாகனங்கள் நாளை மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி சந்திப்புகளில் இருந்து எல்லை மாவட்டங்கள் நோக்கிச் செல்லுமாறு வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மதுரவாயல் - வண்டலூர்
மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சீபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி.சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
5-10-2025 பிற்பகல் 2 மணி முதல் 6-10-2025 மாலை 4 மணி வரை செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு -காஞ்சீபுரம் சாலை, வாலாஜாபாத்-காஞ்சீபுரம, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள்கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.. இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள் வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
தாம்பரம் போலீஸார் அறிவிப்பு
ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தலாம்.
எனவே வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசாருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications