வண்டலூரில் நற்செய்தி.. உயிரியல் பூங்கா திடீர்னு தந்த சர்ப்ரைஸ் பாருங்க.. அதுவும் நாளைக்கு.. சூப்பர்ல
சென்னை: இந்தியாவிலேயே, உயிரியல் பூங்காக்களில் மிகச்சிறந்த பூங்கா என்ற விருதை பெற்றிருக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
வண்டலூர் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும்.. கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்.. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்திருந்தார்கள்.

பூங்கா: அதற்கு பிறகுதான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த பூங்காவை ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள். எப்படியும் ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்... அதுவும் லீவு நாட்கள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்கிறார்கள்.
டிக்கெட் கட்டணம்: இந்த பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.. இந்த கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்த அரசு இருப்பதாக தகவல்கள் வெளியானது.. இந்த திடீர் கட்டண உயர்வுக்கு காரணம், விலங்குகளின் சாப்பாட்டுக்கே ரூ.6 கோடிக்கு மேல் ஆகிறதாம்.. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது என்கிறார்கள்...
இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், இந்த கட்ட உயர்வு, லேசான அதிருப்தியை பொதுமக்களிடம் ஏற்படுத்த துவங்கிவிட்டது. இதனால், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும் என்றும், என்கிறார்கள்..
பார்வையாளர்கள்: அதுமட்டுமல்ல, விலங்குகளை பார்ப்பதை தவிர போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பூங்காவில் இல்லை.. போதிய பேட்டரி வாகனங்களும் இல்லை. அதனால், இந்த கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போதே கிளம்பிவிட்டன.
இந்நிலையில், ஓணம் பண்டிகையினை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 29ம் தேதி, செவ்வாய்க்கிழமை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து சொல்கிறார்கள்.. ஆனால், இந்த உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வார விடுமுறை விடப்படுவதால் அன்றைய தினம் பூங்கா இயங்காது.
அறிவிப்பு: நாளை ஆகஸ்ட் 29 அன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாப்படுகிறது. எனவே, அன்றைய தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வார விடுமுறை ரத்து செய்யப்பட்டு, நாளை செவ்வாய்க்கிழமை பூங்கா வழக்கம்போல் இயங்கும் என்று அதன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு குஷியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications