வண்டலூர் பூங்கா போக போறீங்களா? இதோ ஒரு இனிப்பு செய்தி.. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் வெயில் பின்னியெடுத்து வரும்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வண்டலூர் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா ஆகும்.. இது கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர் இருந்ததாம். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இதனை அமைத்திருந்தார்கள்.

Vandalur Zoo Summer Holidays

அதுக்கப்புறம்தான், விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் நிலைத்துவிட்டது.

பராமரிப்பு: இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.. 2,400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறதாம்.. அதேபோல அரியவகை பறவைகளும் காணப்படுகின்றன.. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இதை பார்ப்பதற்காக குவிவார்கள்.. முக்கியமாக குழந்தைகளை இந்த பூங்காவுக்கு அழைத்து வந்து, ஆர்வத்துடன் காட்டி மகிழ்வார்கள்.

இதற்கு காரணம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன், வண்ணத்துப்பூச்சி பூங்கா மியூசியம் என்று தனித்தனியாகவும் அமைக்கப்பட்டள்ளன..

தற்போது கோடை காலம் என்பதால், வெப்பத்தை சமாளிக்கும் அளவுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் பூங்காவில் செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

பயணிகள்: ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இதுவே விடுமுறை நாள் என்றால், 10 ஆயிரம் பேர்கூட வந்து போவார்களாம்.

எனினும், வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் செயல்படுவதில்லை.. அன்றைய தினம் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாளை அதாவது, ஜூன் 4ம் தேதி, பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்திருக்கும்: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூடுதலாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+