ரெடியானது வந்தே பாரத் சாதாரண் ரயில்.. எப்போது முதல் இயக்கப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு?
சென்னை: வந்தே பாரத் சாதாரண் ரயில் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு தேவையில்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. ஏசி இல்லாத 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து உள்ளன. இதையடுத்து குறைந்த கட்டணத்தில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 8 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. 12 மூன்றாம் தர ஏசி கோச்சுகளும், 2 முதல் தர ஏசிகளும் கொண்ட 22 பெட்டி ரயில் ஆகும். தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும்.
அதாவது மாடர்ன் தோற்றம், உள்ளே பயோ டாய்லெட், தானாக மூடும் கதவு, அதிக வேகம், சிசிடிவி கேமரா, சுத்தம் என்று எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் புக்கிங் செய்தால் மட்டுமே பயணம் என்ற நிலை இருக்காது. ஒரு சில பெட்டிகளில் இதில் ஏசி இருக்காது. இதனால் கணிசமான கட்டணம் குறையும்.
கட்டணம் குறையும்: செலவு அதிகமாக குறைவதால் டிக்கெட் கட்டணம் பாதிக்கு பாதி குறையும். தற்போது இருக்கும் ரயிலில் டிக்கெட் கட்டணம் 1500 ரூபாயாக இருக்கிறது என்றால்.. சாதாரண ரயிலில் 750 ஆக இருக்கும். இந்த சாதாரண் ரயிலில் ஜன்னல்கள் திறக்கும் வகையில் இருக்கும். இதனால் ஏசிக்கு பதிலாக வெளிக்காற்று உள்ளே வரும். வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் வந்தே பாரத் சாதாரண் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.
மேற்கு வங்கத்தில் இந்த ரயில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் கட்டுமானம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ரயிலை உருவாக்க 65 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் இரண்டு பக்கமும் எஞ்சின் கொண்ட ரயிலாக இது இயங்கும். ஒரு எஞ்சின் புல் செய்யவும், இன்னொரு எஞ்சின் புஷ் செய்யவும் பயன்படும். இதனால் ரயிலின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
இந்த சேவை விரைவில் தொடங்கப்பட்டாலும் எங்கே தொடங்கப்படும்.. எந்த நகரங்களுக்கு இடையில் இயங்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை:
படுக்கை வசதி; இது போக விரைவில் இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications