ரயில்வே கலரே மாறப் போகுது! அலுங்காம குலுங்காம.. 180 கிமீ வேகத்தை எட்டிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
சென்னை: இந்திய ரயில்வேயின் அடுத்த பாய்ச்சலாக வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்தில் 180 கிலோமீட்டர் வேகத்தை ஸ்லீப்பர் ரயில் தொட்ட நிலையில், விரைவில் அந்த ரயில் வரும் மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பல வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்தது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்:
இதை அடுத்து அதற்கான பணிகளை ரயில்வே தொடங்கியது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முதல் ப்ரோட்டோ டைப் தோற்றத்தை கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய ரயில்வே வெளியிட்டது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதித்த பின் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு கூறியது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நீண்ட மற்றும் நடுத்தர தூர பயணத்திற்காக அதே நேரத்தில், பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டம்:
ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ரயில்களை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட காவாச் அமைப்பு மூலம் பெருமளவு விபத்துகளும் தவிர்க்கப்படும். மேலும் மொபைல் போன்களுக்கான சார்ஜிங் வசதி, நைட் லாம்ப், விஷுவல் டிஸ்ப்ளே, மேலே இருக்கும் இருக்கைக்கு செல்வதற்காக படிக்கட்டுகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் தயாரிக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் எழுந்து சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்டிஎஸ்ஓ:
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டத்தை லக்னோவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) நடத்துகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, வந்தே ஸ்லீப்பர் ரயிலின் வேகம், பிரேக் செயல்திறன் சோதனைகள், கப்லர் ஃபோர்ஸ் சோதனைகள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அளவுருக்களை ஆர்டிஎஸ்ஓ சரிபார்த்து வருகிறது.
Vande Bharat (Sleeper) testing at 180 kmph pic.twitter.com/ruVaR3NNOt
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 2, 2025
180 கிமீ வேகம்:
தற்போது, மேற்கு மத்திய ரயில்வே (WCR) மண்டலத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் வேக சோதனையின் போது அதிகபட்டசமாக 180 கிமீ வேகத்தை எட்டியது. ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் கோட்டா மற்றும் லாபன் இடையே அதிகபட்ச வேகத்தை எட்டிய போது அதிர்வின்றி ரயில் இயக்கப்பட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
மார்ச் முதல் சேவை:
இந்நிலையில், நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மார்ச் மாதத்திற்குள் தொடங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஜனவரி மாதம் வரை ஆர்டிஎஸ்ஓ மேற்பார்வையின் கீழ் தொடரும். பிப்ரவரி மாதத்தில் ரயில் அதிகபட்ச வேகத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ஆய்வு செய்யப்படவுள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது?:
சோதனை முடிவின் படி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளிக்கும் பாதுகாப்பு சோதனை ஒப்புதல் பெற்றவுடன், ரயிலானது அதிகாரப்பூர்வமாக மக்கள் சேவைக்கு சேர்க்கப்படும். எனவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரும் மார்ச் மாதத்தில் அதன் மக்கள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications