தாமதமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை! எப்போது பயன்பாட்டுக்கு வரும்? ரயில்வே அதிகாரி விளக்கம்
சென்னை: கடந்த 6 மாதத்துக்கு முன்பே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் வெற்றி பெற்ற நிலையில், இந்த ரயிலை இயக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஆணையர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படுவதில் இன்னும் தாமதம் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாகவும், மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் -11 மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் - 4, ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி என்ற வகையில் தயாரிக்கப்பட்டன. மொத்தம் 823 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையில் தயார் செய்யப்பட்டது.

பாதுகாப்பு குறைபாடுகள்
கடந்த 6 மாதத்திற்கு முன்பே இந்த ரயிலானது தயாரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் இந்த ரயிலை இயக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரித்து அனுப்பிய பிறகு அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அவை சரிசெய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரயில் 160 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது.
இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை
இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஆணையர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படுவதில் தாமதம் ஆகியுள்ளது. ரயிலின் வடிவமைப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சில ஆட்சேபனைகளை தெரிவித்தார். குறிப்பாக சில பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக எழுந்த சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் வடிவமைப்பு மற்றும் மின் இணைப்பு, எந்திர பாகங்களில் எந்தவித குறைபாடும் இல்லை. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் கவாச் அமைப்பு மற்றும் தீ விபத்தினை தடுக்கும் வகையிலான அமைப்பும் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது மேலும் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் ரயில்வே
பயணிகளின் போக்குவரத்தினை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ற மாதிரி பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களோடு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
பயணிகள் ஏமாற்றம்
அந்த வகையில் வந்தே பாரத் ரயில்களை ரயில்வே அறிமுக செய்தது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. தமிழகத்திலும் சென்னை - பெங்களூர், சென்னை - நெல்லை என பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெட்டிகள் முழுதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல்வேறு வசதிகள் இருக்கிறது. ஆனால் படுக்கை வசதி இல்லை என்ற குறையினை பயணிகள் தொடர்ச்சியாக கூறி வந்தனர்.
இதையடுத்து தான் பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்து, சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் தாமதம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
என்னென்ன வசதிகள் உள்ளன?
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எல்லா பெட்டிகளிலும் ஏசி வசதி, அனைத்து பெட்டிகளிளும் கண்காணிப்பு கேமராக்கள், ஹீட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு படுக்கைகள் மற்றும் டாய்லட்கள், சென்சார் வசதி கதவுகள், தானியங்கி வெளிப்புற கதவுகள், எமெர்ஜென்சி காலங்களில் பயணிகள் ரயில் மேலாளர், லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்காக அவசரமாக பேசுவதற்கான வசதிகள், தீ பாதுகாப்பு கருவிகள், செக்யூரிட்டி கேமரா, பயோ டாய்லட் மற்றும் கவாச் அமைப்பு போன்ற பல வசதிகள் உள்ளன.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications