இரண்டு தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்.. இரவில் ஓடப்போகிறது? எப்போ தெரியுமா? செம்ம ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, தூங்கும் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க உள்ளதாக ஐசிஎப் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாராக உள்ளன.. இதற்கான சோதனை ஓட்டம் முடிந்து ஒப்புதலும் கிடைத்துவிட்டது. எனினும் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தொலை நேர பயணத்திற்கு ஏற்றவாறு வந்தே பாரத் ரயில்கள் மிருதுவாக இல்லாமல் கடினமாக இருப்பதாக பயணிகள் புகார்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளை, தலா 120 கோடி ரூபாயில் தயாரித்து இரவு நேரங்களில் இயக்க உள்ளதாகவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

24 பெட்டிகள்

இதற்காகவே 24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.



தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் பெங்களூரில் உள்ள BEML நிறுவனத்தில், முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் கடந்த வருடமே நடந்து முடிந்தது.. 16 AC பெட்டிகளில் அதாவது . ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களில் பெட்டிகள் உள்ளதாம்.. இதில், முதல் வகுப்பு பெட்டியில், சுடுநீரில் குளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர, ஒவ்வொரு சீட்டிலும், எல்இடி மின் விளக்கு, செல்போன், லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. AC பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சிறய அளவிலான ஓட்டல், ஃப்ரிட்ஜ் வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட 30 வசதிகள் இருக்கிறதாம்.

2 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

இந்த ரயில் சென்னை ஐசிஎப்-க்கு கொண்டு வரப்பட்டு, ரயில் பாதையில் இயக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.. மேலும் ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன் உள்ளிட்டவை குறித்து, வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தியருடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலையும் பெற்றாகிவிட்டது.

எனினும் இதுவரை இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரவில்லை.. கடந்த மாதம் இறுதிகட்டம் இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தூங்கும் வசதி கொண், வந்தே பாரத் ரயில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் உடையது. நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது என்பதால், மற்றொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனவே, 2வது ரயில் தயாரிப்பு நடைபெற்று, அதுவும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு பிறகே ஸ்லீப்,பர் வந்தே பாரத் ரயில் போக்குவரத்து துவங்கும் என்றனர்.

எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது

இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் இந்த ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல வெளியாகியிருக்கிறது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பயணிகளை வெகுவாக கவரும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ. வரை வேகமாக செல்லும் திறன் கொண்டது. பயணிகள் வசதிக்காக, ரயில் பெட்டியின் உள்பகுதியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது.

நீண்ட துாரம் செல்லும் தடத்தில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாராக உள்ளது. 2-வது ரயில், தயாரிப்பு பணியும் முடிந்து, அக்டோபர் 15க்குள் வந்து விடும். எனவே, 2 வந்தே பாரத் ரயில்களும் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது" என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+