வந்தே பாரத் அசத்தல்..ரயில் தயாரிப்பில் கலக்கும் ஐசிஎஃப்.. தவழ்ந்து வந்த ஸ்வீட் நியூஸ்..சென்னை ஹேப்பி
சென்னை: வந்தே பாரத் தயாரிப்பு பணியில் அதிரடி காட்டிக்கொண்டிருக்கும் ஐசிஎஃப்-க்கு ஸ்வீட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது.. இதையடுத்து, சென்னை ஐசிஎஃப் பெருத்த மகிழ்ச்சியில் காணப்படுகிறது.இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
குளுகுளு ரயில்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார். நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன.
சாதாரண் வந்தே பாரத்: இதைத்தவிர, இன்னும் 2 மாதங்களில், அதாவது, வருகிற அக்டோபர் மாதமே இந்த சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போகுதாம். 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உட்பட, 22 பெட்டிகளுடன், சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், ஐசிஎஃப் ஆலையில் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 ரயில்களை மட்டும் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போவதாகவும், 2 நாட்களுக்கு முன்புகூட அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்..
இப்படி வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதில், ஐசிஎஃப் ஊழியர்களின் பங்கு அபரிமிதமானது என்பதை மறுக்க முடியாது. காரணம், உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக, நம்முடைய சென்னை ஐசிஎஃப் திகழ்கிறது. இங்கு 71,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ரயில் தயாரிப்புகள்: தற்சமயம், வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதிலும், 2023-24-ம் நிதியாண்டில் சென்னை ஐசிஎஃப்-ல் மட்டுமே, மொத்தம் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டப்பிரிவில், வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான "நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருது" சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது... இந்திய திட்ட மேலாண்மை நிறுவனமானது, இந்த விருதினை வழங்கியிருக்கிறது.
மகிழ்ச்சி: நிதி ஆயோக் நிறுவன இயக்குநர் விஜய்குமாரிடமிருந்து ஐசிஎஃப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா விருதை பெற்றுக்கொண்டார். வந்தே பாரத் ரயில் தயாரிப்புகளுக்காக இந்த விருதினை பெற்றதையடுத்து, ஐசிஎஃப் ஊழியர்களே பெருத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications