Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப்ல போன வந்தே பாரத் ரயில்..ஸ்பெஷலே "இதானே".. புருவம் உயர்த்தும் "தெற்கு".. பூரித்த தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயிலில் குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாகவும், தென்னகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களே, அனைத்து விதமான பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

Vande Bharat Train and Vande Bharat Express is gaining popularity in the South India, says southern railway

பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

கனவுத்திட்டம்: இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.

அந்தவகையில் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை - நெல்லை இடையேயான வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே: இந்நிலையில், தென்னகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களே, அனைத்து விதமான பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது என்று தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொன்னதாவது:

வந்தே பாரத் ரயில் பயணிகள் இடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் திருவனந்தபுரம் - ஆலப்புழா வழியாக காசர்கோடு ரயிலில் 35 சதவீதம் பேர் குடும்பமாகவும், 14 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயிலில் பயணித்த 26 சதவீதம் பேர் 35-49 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வந்தே பாரத்: அதே போல காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே செல்லும் ரயிலில் 15 சதவீதம் பேர் சுற்றுலாவுக்கும், 14 சதவீதம் பேர் வணிக காரணங்களுக்காகவும் பயணம் மேற்கொள்கின்றனர்.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 77% குடும்பங்களும், 16% பேர் வணிக காரணங்களுக்காக பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 36 சதவீதம் பேர் 35-49 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கோவை - சென்னை ரயிலில் 71% குடும்பங்களும், 11% பேர் வணிக காரணங்களுக்காகவும், 7 % பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 28% பேர் 35-49 வயதுக்கும், 21% பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

குடும்பங்கள்: அதே போல சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயிலில் 71% குடும்பங்களும், 11% பேர் வணிக காரணங்களுக்காகவும், 7% பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் பயணித்த 28 % பேர் 35-49 வயதுக்கும், 21% பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

சென்னை - விஜயவாடா ரயிலில் 36 % குடும்பங்களும், 22% பேர் வணிக காரணங்களுக்காகவும், 20% பேர் சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயிலில் பயணித்த 37% பேர் 35-49 வயதுக்கும், 30% பேர் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்த தரவுகள் வந்தே பாரத் ரயில்கள் தொழில்முறை பயணிகளின் விருப்ப தேர்வாக இருப்பதை காட்டுகிறது.

ஸ்பெஷாலிட்டி: அதிவேகம், இணையதள சேவையுடன் மின்னணு தகவல், வசதியான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த எளிய நவீன வசதிகள், கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜர், சுழலும் இருக்கை, சுவையான உணவு போன்ற காரணங்களால் அதிகமானோரை பயணிக்க வைத்துள்ளது. இதனால், பயண நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்துகிறது, அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+