வனிதாவை வாய்க்கு வந்தபடி திட்டிய சூர்யா தேவி.. கைது செய்த போலீஸ்.. இனிமேலாவது மூடுவாங்களா வாயை!
சூர்யாதேவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: வனிதாவை, அசிங்க அசிங்கமாக திட்டி நேற்றுகூட வீடியோ வெளியிட்டிருந்தார் சூர்யாதேவி.. இதையடுத்து நள்ளிரவில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.. வனிதாவுடன் நடத்திய 3 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி ஆனதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை அதிரடியாக எடுக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய 4வது கல்யாண நிகழ்ச்சியை யூ-டியூபில் பதிவு செய்திருந்தார் வனிதா.. ஒருசாரார் வனிதா கல்யாணம் சொந்த விஷயம் என்கிறார்கள்.
ஒருசாரார் பீட்டர் பால் மனைவி இதில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவருக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. அப்படி ஆதரவு தந்தவர்தான் சூர்யாதேவி என்பவர். இவருக்கு 27 வயதாகிறது. சாலிகிராமம் தசரதபுரம் சண்முக சுந்தரம் தெருவை சேர்ந்தவர் இந்த சூர்யா தேவி.

வீடியோ
சில தினங்களுக்கு முன்பு வனிதாவை எதிர்த்து யூ-டியூபில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்... அதில் அசிங்க அசிங்கமாக வனிதாவை திட்டியும் இருந்தார்.. இந்த வீடியோக்கள் எல்லாமே சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்து நடிகை வனிதா, அந்த வீடியோவை பதிவு செய்த சூர்யா தேவி மீது போரூர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்று கூறியிருந்தார்.

கஞ்சா வியாபாரி
இதை பார்த்து கொதித்து போன சூர்யா தேவி, வடபழனி ஸ்டேஷனில் வனிதா மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், "நான் வாடகை வீட்டில் கணவர், மகன், மகளுடன் வசித்து வருகிறேன்... நான் ஒரு கஞ்சா வியாபாரி என்று சொல்லி, என் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.. இது எனக்கு மனம் புண்படும்படியாக உள்ளது... அதனால் வனிதா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை மிரட்டல்
போரூரில் நடிகை வனிதா, சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது, சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இந்த அனைத்து புகார்களும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

பேச்சுவார்த்தை
இந்நிலையில் வடபழனி போலீஸார் வனிதாவையும், சூர்யாதேவியையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.. "பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வெளியே வந்த வனிதா, "சமாதானமாக போறதுக்காகத்தான் நான் பேச்சுவார்த்தைக்கு வந்தேன் ஆனால் அந்த பொண்ணு அதற்கு தயாராக இல்லை" என்று வனிதா செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவதூறு
ஏற்கனவே வடபழனி போலீசார், இதுபோன்ற வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என 2 பேரையுமே போலீசார் எச்சரித்திருந்தனர். ஆனால், சூர்யாதேவி அந்த எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.. பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் சூர்யாதேவி..
இந்த சூர்யாதேவி, தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக பேசிய விவகாரத்தில் சூர்யா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications