அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த.. பவன்குமார் ரெட்டி ரௌடித்தனம்! தாம்பரம் தடியடிக்கு வன்னியரசு கண்டனம்
சென்னை: தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி நிர்வாகத்தின் 73 சென்ட் நிலத்தை மாநகராட்சி ஆணையர் கையகப்படுத்தும் மக்கள் விரோத செயலை கண்டித்து, நேற்று மாலை 5 மணிக்கு தாம்பரம் பாரதி திடலில் போராட்டம் நடைப்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் - மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைத்திருந்த இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். அமைதியாக நடக்க வேண்டிய போராட்டத்தை வன்முறையாக மாற்றியுள்ளது தாம்பரம் காவல்துறை.

குறிப்பாக தாம்பரம் உதவி ஆணையர் பவன்குமார் ரெட்டி ஒரு ரௌடியை போல நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தரவில்லையென்றாலும், அரை மணி நேரம் போராட்ட நோக்கம் குறித்து மட்டும் பேசி விட்டு கலைகிறோம்.அல்லது கைது செய்யுங்கள் என்று சொல்லி விட்டு பேச ஆரம்பித்தோம். ஆனால், திரு.பவன்குமார் ரெட்டி போராட்டத்துக்கு வந்த தோழர்களை அவரே கழுத்தை பிடித்து இழுத்து அடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். சனநாயக ரீதியாக நடக்க வேண்டிய போராட்டத்தை வன்முறைக்காடாக மாற்றிய பெருமை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி அவர்களையே சாரும். இந்த மாதிரி ரௌடித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்." என்று தெரிவித்து இருந்தார்.

இப்போது, விடுதலைச் சிறுத்தைகளும் மனித நேயமக்கள் கட்சியை சார்ந்த தோழர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளோம். தமிழ்நாடு அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க சதி செய்யும் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், "தாம்பரத்தில் காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான போலீசாரின் ரௌடித்தனத்தை பாருங்கள். இன்று விடுதலைச் சிறுத்தைகளும் மனித நேய மக்கள் கட்சியினரும் இணைந்து நடத்திய போராட்டம் எதற்காக? தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி நிலத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போரட்டம். அனுமதி இல்லை. ஆனாலும் தடையை மீறி நடத்தினோம். அவ்வளவுதான். இது ஒரு குற்றமா? இதோ DC பவன்குமார் ரெட்டியின் ரவுடித்தனத்தை பாருங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். -
-
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications