கட்டுப்பாடானு அந்த பிஞ்சு குழந்தை கேட்குது.. குழந்தைகளின் ஏக்கத்தை பாருங்கள் முதல்வரே.. வன்னியரசு
சென்னை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு கடையில் குழந்தைகளிடம் தீண்டாமையை ஏற்படுத்தியது குறித்து உடனடியாக நடவடிக்கை தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினம் தேன் மிட்டாய், குருவி ரொட்டி உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.

பெட்டிக் கடைக்காரர்
அப்போது அந்த கடைக்காரர், சிறிதும் மனசாட்சியின்றி, "இந்த உள்ளூர் கடையில் திண்பண்டங்கள் யாரும் வாங்கக் கூடாது, நீங்கள் ஸ்கூலுக்கு போங்க, சரியா, உங்க வீட்லயும் எல்லாரிடமும் சொல்லுங்கள், திண்பண்டங்கள் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு! என்கிறார்.

ஊரில் கட்டுப்பாடு
அதையும் மீறி அந்த குழந்தைகள் அங்கேயே நிற்கிறார்கள். அதற்கு அந்த கடைக்காரர், கொடுக்க மாட்டோம்டா, இந்த ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு என்கிறார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படின்னா என கேட்கிறார்கள். அதற்கு அவர் , ஆமாம் ஊரில் கூட்டம் போட்டு உங்களுக்கு திண்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என பேசியுள்ளார்கள் , சரியா போங்க என்கிறார். அந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

வீடியோ வைரல்
இந்த வீடியோவை அந்த கடைக்காரரே எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளனர். இதற்கு பலர் கொதிப்படைந்துள்ளார்கள். தீண்டாமையை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. அதுவும் பெரியார் மண்ணில் இந்த தீண்டாமையை கிள்ளி எறிய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

வன்னியரசு ட்வீட்
இந்த தீண்டாமை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கட்டுப்பாடா? என அந்த பிஞ்சு குழந்தை கேட்குது. அந்த குழந்தைகளின் ஏக்கத்தை பாருங்கள் முதல்வரே
@CMOTamilnadu சாதிவெறியர்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்து சமத்துவத்தை நிலைநாட்டுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications