பூசி பூசி மொழுகாதீங்க.. "பஞ்சமா பாதகர்"களிடம் சிக்கிடுச்சே.. கோட்டைக்கு பறக்கும் புகார்.. என்னாச்சு
சென்னை: விஏஓ மரணம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. கள், காமம், கொலை, கொள்ளை, பொய் என தமிழகம் பஞ்சமா பாதகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ்... அடிப்படையிலேயே மிக நேர்மையானவர்.. கண்டிப்பும், சமூக அக்கறையும் நிறைந்தவர்.

முதல்வர் இரங்கல்: இவர் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்பாக போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரது அலுவலகத்திற்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் மிகுந்த துயரம் அளிப்பதாக அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது" என்று கூறியிருக்கிறார்.
மேலும், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் முதல்வர், லூர்து குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்... இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்.. ஆனாலும், இந்த சம்பவம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பி வருகிறது.. எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...
கையாலாகாதத்தனம்: " பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாதத்தனம்" என்று சீறியிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.. அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது" என்று கொந்தளித்துள்ளார் அண்ணாமலை..
ஆடியோ லீக்: மற்றொருபக்கம், விஏஓ மரணத்துக்கு நீதிகேட்டு, போராட்டங்களும் வலுத்து வருகின்றன.. அதுமட்டுமல்ல, லூர்து பிரான்ஸிஸ்ஸின் உயிரை எடுத்தது வேண்டுமானால் மணல் கடத்தல் கும்பலாக இருக்கலாம், ஆனால் அதற்கு முழுகாரணமும் விஏஓ சங்கங்கள் தான் என ஒரு ஆடியோ வெளியாகி அதற்கு மேல் பகீரை கிளப்பி கொண்டிருக்கிறது.. "லூர்து பிரான்சிஸ்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை கிடையாது.. ஏற்கனவே ஆதிச்ச நல்லூரில் விஏஓ வாக பணியில் இருந்த போது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் அவரை தாக்கியிருக்கிறார்கள்.
அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடி தாலுகாவில் பணி இடம் காலியாகி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே உயிருக்க ஆபத்து இருப்பதாக சொல்லி வந்த லூர்து பிரான்சிஸ்சிற்கு அந்த இடத்தை கொடுக்காமல். விஏஓ சங்கத்தினர் தடுத்து விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது... இதனால் லூர்து பிரான்சிஸ் கேட்ட இடம் கிடைக்காமல் மீண்டும், பிரச்சினைக்குறிய கோவில் பத்து கிராமத்திற்கு பணியில் சேர்த்திருக்கிறார். இது தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் என்று குமுறுகிறார்" அதில் பெண் அதிகாரி ஒருவர் குமுறுகிறார்.
பஞ்சமா பாதகர்கள்: இந்த சம்பவம் தொடர்பாக, சமூக ஆர்வலரும் நடிகையுமான கஸ்தூரி ஆவேசமாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "விஏஓ பிரேமலதா கூற்றுப்படி உயிருக்கு அச்சுறுத்தல் என்று கலெக்டரை கெஞ்சியுள்ளார் விஏஓ லூர்து பிரான்சிஸ். அதை காதிலேயே வாங்காமல் பெண்கள் இருவரை அமர்த்தியுள்ளார். கள், காமம், கொலை, கொள்ளை , பொய். தமிழகம் பஞ்சமா பாதகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது" என்று கடுமையாக ஆதங்கப்பட்டுள்ளார்..
அரசியல் கட்சிகள், பிரபலங்களின் கண்டங்கள், போராட்டங்கள், ஆடியோ பேச்சு என தமிழ்நாட்டின் மிக முக்கிய செய்தியாக விஏஓ கொலை சம்பவம் பேசப்பட்டு வருகிறது.. நேர்மையாக இருந்த ஒரே காரணத்திற்காகவே லூர்து பிரான்சிஸ் கொல்லப்பட்டுள்ளார்.. அதுவும், சொந்த துறை சார்ந்தவர்களின் அலட்சியமும், இந்த கொலைக்க பின்னால் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது..!
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications