துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன் - கவிப் பேரரசு வைரமுத்து
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இன்று பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன் என தமது சமூக வலைதளப் பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தி உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து:
துணை முதல்வராகும்
உதயநிதி ஸ்டாலின் அவர்களே
உங்களை வாழ்த்துகிறேன்
உங்கள்
அன்னையைப் போலவே
நானும் மகிழ்கிறேன்
இந்த உயர்வு
பிறப்பால் வந்தது என்பதில்
கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால்
வந்தது என்பதில்
நிறைய உண்மையும் இருக்கிறது
பதவி உறுதிமொழி ஏற்கும்
இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு
மூன்று பெரும் பேறுகளை
வழங்கியிருக்கிறது
முதலாவது
உங்கள் இளமை
இரண்டாவது
உங்கள் ஒவ்வோர் அசைவையும்
நெறிப்படுத்தும் தலைமை

மூன்றாவது
உச்சத்தில் இருக்கும்
உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும்
எதிர்மறை ஆகிவிடாமல்
காத்துக்கொள்ளும் வல்லமை
உங்களுக்கு வாய்த்திருக்கிறது
உங்கள் ஒவ்வோர் நகர்வும்
மக்களை முன்னிறுத்தியே
என்பதை
மக்கள் உணரச் செய்வதே
உங்கள் எதிர்காலம்
என் பாடலைப் பாடிய
ஒரு கலைஞன்
துணை முதல்வராவதை எண்ணி
என் தமிழ் காரணத்தோடு
கர்வம் கொள்கிறது
கலைஞர் வழிகாட்டுவார்
துணை முதல்வராகும் நீங்கள்
இணை முதல்வராய்
வளர வாழ்த்துகிறேன்
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications