64 வயதில் ரகசியமாக 3ஆவது திருமணம்?.. நடிகை ஜெயசுதா பரபரப்பு விளக்கம்
சென்னை: 64 வயதில் ரகசியமாக 3ஆவது திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து நடிகை ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுஜாதா. இவரது அத்தை நடிகையும், இயக்குநருமான விஜய நிர்மலா ஆவார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குநர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தை தந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

முதல் திருமணம்
காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு நித்தின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு நித்தின் கபூர் ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயசுதாவுக்கு இரு குழந்தைகள்
இந்த நிலையில் ஜெயசுதாவுககு நிஹார், ஷ்ரேயன் என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஜெயசுதா கலந்து கொண்டார். அவர்தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவியது.

மூன்றாவது கணவர்
இந்த நிலையில் தன்னுடைய மூன்றாவது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெயசுதா. அந்த நபர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் அதன் காரணமாகதான் அவர் தன்னுடன் பயணித்து வருவதாகவும் ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

நரேஷ் பாபு
ஏற்கெனவே நடிகர் நரேஷ் பாபு நடிகை பவித்ரா லோகோஷை திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நரேஷின் மனைவி ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பவித்ரா லோகோஷ் நரேஷுக்கு 4 ஆவது மனைவியாக போகிறார் என்றும் நரேஷ் பவித்ராவுக்கு 3ஆவது கணவராகிறார் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை கடந்த ஜனவரி 1 ஆ தேதி அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications