கன்னியாகுமரி மக்களவை தொகுதி: பட்டையை கிளப்பும் விஜய்வசந்த்.. பொன்னாரை விட முன்னிலை!
சென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் இறங்கினார். அவரை எதிர்த்து வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களம் கண்டார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், விஜய் வசந்த்துக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய் வசந்த் முன்னிலை பெற்று வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார். விஜய் வசந்த் இதுவரை 20, 946 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications