விபிஜி ராம் ஜி திட்டம் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே ஊரக வேலை நாட்கள் பாதியாக சரிவு! ஷாக் டேட்டா
சென்னை: விபி ஜி ராம் ஜி திட்டம் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் விபி ஜிராம்ஜி திட்டத்தின் வேலைநாட்கள் 7.67 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலைநாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது. 2025 ஜூலையை விட 2026 ஜூலையில் வேலைநாட்கள் 49.94 சதவீதம் குறைந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் (MGNREGA) மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்கியும், விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது. MGNREGA திட்டத்துக்கு பதில் கொண்டுவரப்பட்ட விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத சட்டம் (VB G RAM G) ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

முந்தைய 100 நாட்களுக்குப் பதிலாக, புதிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், ஒரு மாத முடிவில், ஊரக வேலைநாட்கள் பாதியாக சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் விபி ஜிராம்ஜி திட்டத்தின் வேலை நாட்கள் 7.67 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் 100 நாள் வேலைத் திட்டத்தில் 15.33 வேலை நாட்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டது. 2025 ஜூலையை விட 2026 ஜூலையில் வேலைநாட்கள் 49.94 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், VB-G RAM G திட்டத்தின் கீழ் வேலை கோரிய 99.5% க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 22 ஆம் தேதிக்குள் 5.2 கோடிக்கும் அதிகமான மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது.
இருப்பினும், ஜூலை மாத இறுதிப் புள்ளிவிவரங்கள், ஜூலை மாதத்தின் எஞ்சிய நாட்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மேலும் மந்தமடைந்ததைக் காட்டுகின்றன. திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே, கடந்த ஆண்டை விட சரிபாதி அளவுக்கு வேலை நாட்களின் அளவு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications
