சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்.. ஒப்பந்தம் கையெழுத்தானது

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று கையெழுத்திட்டார்.

80 வயசிலும்.. ஒரு அளவு இல்லையா.. இவ்வளவு ஆசையா.. மூத்த தலைவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! 80 வயசிலும்.. ஒரு அளவு இல்லையா.. இவ்வளவு ஆசையா.. மூத்த தலைவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

திமுக அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பதற்காக இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம் லீக், மமக ஆகியவை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

விசிக தொகுதிகள்

விசிக தொகுதிகள்

முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்; மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக அணியில் 10 அல்லது 9 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கோரியது.

2 முதல் 5 தொகுதிகள்

2 முதல் 5 தொகுதிகள்

இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்த திமுக தரப்பு, தனிச்சின்னத்தில் போட்டியிடுவதானால் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்றது. அதேநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 5 தொகுதிகள் ஒதுக்குவோம் என்றும் திமுக கூறியது. இதனால் விடுதலை சிறுத்தைகள் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

பேச்சுவார்த்தையில் இழுபறி

பேச்சுவார்த்தையில் இழுபறி

திமுகவின் இந்த திட்டவட்டமான நிலை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தீவிர ஆலோசனை நடத்தினர். சென்னையில் நேற்று மாலை நடைபெற இருந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கும் கூட விசிக தலைவர் திருமாவளவன் போகவில்லை. இதனால் பரபரப்பு நிலவியது.

 திமுக அணியில் நீடிப்பு

திமுக அணியில் நீடிப்பு

இதனையடுத்து நடத்தப்பட்ட சமாதான முயற்சிகள் கை கொடுத்தன. திமுக கூட்டணியிலேயே பயணிப்போம்; திமுகவுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என திருமாவளவன் கூறியிருந்தார். இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார் திருமாவளவன்.

 விசிகவுக்கு 6 தொகுதிகள்

விசிகவுக்கு 6 தொகுதிகள்

அண்ணா அறிவாலயத்தில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை திருமாவளவன் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னதாக விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை திருமாவளவன் சமாதானம் செய்தார்.


திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்

English summary
Sources said that VCK party may get 5 or 6 seats in DMK Alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X