வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 8 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது, தான் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திருமாவளவன் தற்போது எம்பியாக உள்ள நிலையில் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து இந்த தேர்தலில் 10 தொகுதிகள் வரை விசிக எதிர்பார்த்தது.

ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதி கிடைக்கவில்லை. மாறாக விசிகவிற்கு 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொகுதி வாரியாக பார்த்தால் காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), திருப்போரூர், பண்ருட்டி என மொத்தம் 8 தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று திருமாவளவன் அறிவித்தார். திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவில் தோன்றி வேட்பாளர்களை அறிவித்தார்.
அதன்படி, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவனே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் அவர் திடீரென்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் உள்ளார். தற்போது அவருக்கு பதில் திருமாவளவன் களமிறங்கி உள்ளார்.
இதற்கு முன்பு விசிக சார்பில் 2006ல் ரவிக்குமார் இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். அதன்பிறகு இந்த தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டார். அதில் திருமாவளவன் 87 ஓட்டகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் நா. முருகுமாறன் 48,450 ஓட்டுகள் பெற்றார். தொல் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் களமிறங்கி உள்ளார்.
மேலும் விசிக சார்பில் 7 தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி திண்டிவனம் தொகுதியில் வன்னியரசு போட்டியிடுகிறார். பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் மாலதி, செய்யூர் தொகுதியில் சிந்தனை செல்வன், திருப்போரூரில் பன்னீர் தாஸ், பெரியகுளம் தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் தொகுதியில் எழில் கரோலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications