மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு.. தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை?!
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், 20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கட்சியுடன் யார் கூட்டணி வைக்க போகிறார்கள் என்ற கேள்விதான் தற்போது பலமாக இருக்கிறது. திமுக தனது தோழமை கட்சிகளுடன் தேர்தலை சந்திக்குமா, இல்லை தனியாக தேர்தலில் போட்டியிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

[திமுகவுடன் கூட்டணியில் பிரச்சனையா? திருமாவளவன் விளக்கம்! ]
இதற்கு மத்தியில் திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று திமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசினார். அதில், திமுகவுடன் தற்போது இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் தான் என்றும், கூட்டணி கட்சிகள் அல்ல என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை, நாங்கள் நண்பர்களாகதான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சுமார் 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை செய்தனர். தேர்தல் கூட்டணி குறித்து இவர்கள் விவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று புதுக்கோட்டையில் தினகரனை சந்தித்து பேசியிருந்தார் திருமாவளவன். இதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பு காரணமாக திமுக - விசிக கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications