கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன் "கழுவேத்தி மூர்க்கன்”- அருள்நிதிக்கு திருமாவளவன் பாராட்டு!
சென்னை: இயக்குநர் கெளதமராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம், 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பாராட்டி உள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கழுவேத்தி மூர்க்கன் சினிமா குறித்து தொல். திருமாவளவன் பாராட்டி எழுதியிருப்பதாவது: கழுவேத்தி மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைக் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன்.

'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். இவ்வாறு தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன் எம்.பியின் இந்த பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அண்ணா என பதிலளித்துள்ளார் இயக்குநர் கெளதம்ராஜ்.
#கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம்… pic.twitter.com/A6CPNlMXRz
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 3, 2023












Click it and Unblock the Notifications