திருமாவளவன் ட்வீட்டால் பரபர - பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு ஆதரவு தரும் விசிக!
சென்னை: பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி வெளியேறி இருக்கும் நடிகை காயத்ரி ரகுராமுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது. பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேறியதற்கு, இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியிருக்கிறார்.

தமிழக பாஜகவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளில் இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். ஒவ்வொரு முறையும் பாஜகவில் பதவி பெறுகிற போது பல சர்ச்சைகளில் காயத்ரி ரகுராம் பெயர் அடிபடுவது தொடர்ந்து கொண்டிருந்தது. பாஜகவின் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பிரிவின் தலைவராக இருந்தார் காயத்ரி ரகுராம்.
ஆனால் காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காயத்ரி ரகுராம் ஓரம்கட்டப்பட்டார் என கூறப்படுவது உண்டு. அத்துடன் தமிழக பாஜகவின் உட்கட்சி பூசல்களில் காயத்ரி ரகுராம் பரபரப்பாக பேசப்பட்டார் . திருச்சி சூர்யா- டெய்ஸி ஆபாச சர்ச்சை ஆடியோ விவகாரத்தில் நீதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டார் காயத்ரி ரகுராம். இதனால் பாஜகவில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அதன்பின்னர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி. இந்த நிலையில் தாம் பாஜகவை விட்டு வெளியேறுவதாகவும் நேற்று காயத்ரி ரகுராம் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், துபாய் ஹோட்டல் விவகாரத்தை முன்வைத்து தம்மை அண்ணாமலை அவமானப்படுத்தினார் என குற்றம்சாட்டினார்.
பின்னர் அதிமுக, விசிக என எந்த கட்சி அழைத்தாலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் அந்த கட்சிக்கு சென்று இணைந்து பணியாற்ற தயார் எனவும் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். இதனால் காயத்ரி ரகுராம் எந்த கட்சிக்குப் போவார் என்கிற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில், காயத்ரி ரகுராமுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், #BJP பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக. என தெரிவித்துள்ளார். அதாவது காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து வெளியேறியதை திருமாவளவன் வரவேற்றுள்ளார். திருமாவளவனின் இந்த ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications