விஜய் மே 11 முதலமைச்சராக பதவியேற்பாரா? TVK-வுக்கு விசிக ஆதரவு.. இறுதியாக 118 இடங்கள் கிடைத்தது!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்புக்கு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. 5 நாள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த ஆதரவு கடிதத்தை தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஜய் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

TVK vijay VCK politics vck support to tvk vijay chief minister oath may 11 tvk reaches 118 mlas tamilaga vetri kazhagam vck alliance viduthalai chiruthaigal katchi unconditional support adhav arjuna receives vck letter vijay emotional tears of joy tamil nadu tvk government formation may 11 chennai oath ceremony nehru indoor stadium vijay cm tamil nadu assembly election latest tvk 108 seats plus allies governor verification forgery allegations governor kerala trip delay actor vijay becomes tamil nadu cm 11 118 11 108

விசிக ஆதரவு

சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே ஆதரவு அளித்த நிலையில், தவெக கூட்டணியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்திருந்தது.

பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் விசிகவின் ஆதரவு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த ஆதரவு அறிவிப்பு இன்று காலை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணத்தால் தாமதம் ஏற்பட்டு மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெக-விற்கு இந்த செய்தி பலமாக மாறியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய தருணம்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையுமா என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், விசிகவின் ஆதரவு அறிவிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆதரவுக்குப் பிறகு விசிகவும் இணைந்துள்ளது. இதன் மூலம் தவெகவின் ஆட்சி அமைப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இதைவிட முக்கியமாக கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளை போலவே தவெக-க்காகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக விசிக கட்சி தவெக-வுக்கு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

மே 11 அன்று பதவியேற்பு விழா

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், மே 11ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி விஜய்க்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பதவியேற்பு விழா தமிழக மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் சந்திப்பு

தவெக, விசிகவிடம் ஆதரவு கடிதம் அளித்த நிலையில் விஜய் மீண்டும் இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் தவெக சமர்ப்பித்த ஆதரவுக் கடிதங்களில் மோசடி (forgery) நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என்று தெரிகிறது. கடிதங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பு செயல்முறை சில காலம் எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆனால் ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும், மேலும், ஆளுநர் இன்று மாலை கேரளாவுக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் பயணம் ஆட்சி அமைப்பு தொடர்பான முடிவுகளில் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+