கூட்டணிக் கட்சிக்காரனுக்கு எங்க கொடி கசக்கும்! ஓட்டு மட்டும் இனிக்கும்! அனல் கக்கிய திருமாவளவன்!
கூட்டணிக் கட்சியினர் மீது திருமாவளவன் பகிரங்க சாடல்.
சென்னை: கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும் ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் திருமாவளவன் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு சாடியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அனல் கக்கிய திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலையை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், மனதில் தோன்றிய ஆதங்கத்தை மறைக்காமல் கொடித்தீர்த்தார். தேர்தல் அரசியலுக்காக தாம் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும் தேர்தல் அரசியல் வேண்டாம் என்று 10 ஆண்டுகள் தேர்தலை புறக்கணித்த கட்சி விசிக எனவும் தெரிவித்தார். பாஜகவில் கிரிமினல்களை தேடி தேடிச் சேர்ப்பதாக விமர்சித்த அவர் கருத்தியல் ரீதியாக விசிகவினருடன் பாஜக நிர்வாகிகள் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பினார்.

நான்கு பேரும்
தமிழக சட்டசபைக்கு தாம் அனுப்பியுள்ள 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் நன் முத்துக்கள் என திமுகவினர் தன்னிடம் பாராட்டுவதாகவும் அவர்கள் அவையில் பேசினால் அவர்கள் முகம் தெரியவில்லை, உங்கள் முகம் தான் தெரிகிறது, அந்தளவுக்கு உங்கள் வளர்ப்பு இருக்கிறது எனக் கூறியதாகவும் கூறினார். குற்றவாளிகளுக்கு மட்டுமே பாஜகவில் பதவி வழங்கப்படுவதாகவும் கிரிமினல் என்று தெரிந்தே அவர்களுக்கு பதவி வழங்கும் ஒரே கட்சி பாஜக தான் எனவும் விமர்சித்தார்.

கூட்டணிக் கட்சி
இப்படியாக பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும் ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்தார். பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அவர் இதன் மூலம் திமுகவை மறைமுகமாக சாடினார்.

முதல்வருக்கு வலியுறுத்தல்
கிரிமினல்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முதலில் முதலமைச்சர் கைவிட வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக பேசிய திருமாவளவன், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் ரவுடிகளை நம்பி அரசியல் செய்வார்கள் என பாஜகவை விமர்சித்தார். திருமாவளவனின் பேச்சு பாஜகவை நேரடியாகவும் திமுகவை மறைமுகமாகவும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications