அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது.. ஆனால் பிணைப்பு இல்லை - திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி கூறியுள்ளது பாஜவுக்கான பதில் தான் என்றும், அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது. ஆனால் பிணைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதிருந்தே தமிழ்நாடு அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களில் தீவிரமாகி வருகின்றன. ஆளும் திமுகவை எதிர்க்க அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அவர்களுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அது இப்போதும் தொடர்கிறது. கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிமுக - பாஜக இடையே தொடந்து விவாதம் நிலவி வருகிறது. சமூகவலைதளங்களிலும் அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் ஏற்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து விவாதம் ஏற்படுமளவுக்கு பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தலில் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " அமித்ஷா மட்டும்தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார் என்று கூறியிருந்தேன். தற்போது எடப்பாடி அதற்கு விடை கொடுத்துள்ளார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பாஜகவிற்கான பதில் தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.
அதிமுக அதற்கு உடன்படாது என்ற கருத்தையே பாஜகவினருக்கு எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது. ஆனால், பிணைப்பு இல்லை என்றார். மேலும், கஸ்டடி டெத் என்பது நிகழக் கூடாது. அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிறபோது, சுட்டியும் காட்டுகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
-
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தவெக அமைச்சரவையில் வெளியேறுவோம்.. திருமாவளவன் மீண்டும் ட்விஸ்ட்.. விஜய் ஷாக் -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications