இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா!
சென்னை: இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண் என பாஜக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலிலும் சரி நாடாளுமன்ற தேர்தலிலும் சரி திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

வட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே, இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.
இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே,இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
— Thol.Thirumavalavan (@thirumaofficial) May 24, 2019
தொடக்கம் முதலே திருமாவளவன் பாஜகவை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணியை சாடும் வகையில் சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications