"எப்ப பார்த்தாலும் சர்ச்சைதான்.. இவங்க சூர்யாவை மிரட்டல".. பாமகவை மீண்டும் சீண்டும் திருமாவளவன்
பாமக மீது திருமாவளவன் காட்டமான விமர்சனம் முன்வைத்துள்ளார்
சென்னை: பாமக தனது அரசியல் அடித்தளத்தை இழக்கும் போதெல்லாம், அவை சர்ச்சையை உருவாக்குகின்றன.. இவர்கள் சூர்யாவை அச்சுறுத்தவில்லை, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலையே ஏற்படுத்தி வருகின்றனர் என்று திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
சில தினங்களாகவே ஜெய்பீம் விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது.. பாமக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. கடுமையான கண்டனங்களை விடுத்து வரும் நிலையில், பாமக தொண்டர்களும் சோஷியல் மீடியாவில் சூர்யாவுக்கு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமகவின் அரசியலையும் வன்முறையையும் விசிக தலைவர் திருமாவளவன் கண்டித்து வருகிறார்..

உள்நோக்கம்
நேற்றுகூட செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒருகுறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடியதாக இருந்தால், அது கண்டிக்க வேண்டியதே.. அப்படி உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நடிகர் சூர்யா தெளிவுபடுத்தி இருக்கிறார்.. அதற்கு பிறகாவது பாமக தலைமை, தம்முடைய தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.. இத்தகைய போக்குகளை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..

இளைஞர்கள்
எந்த சமூகத்திற்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூகம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அக்காட்சி தலைமையில் நடந்து கொள்கிறது. ஒரு கட்சித் தலைமையே இவ்வாறு செயல்பட்டால் தொண்டர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? இதனால் சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்படவேண்டும் தவிர்க்கப்பட வேண்டும்" என்ற வேண்டுகோளையும் திருமாவளவன் விடுத்திருந்தார்.

மிரட்டல்
எனினும் பாமக மேலிடம் எந்தவிதமான நடவடிக்கையும் இது தொடர்பாக எடுக்கவில்லை என்றே தெரிகிறது.. சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் போக்கும் தொடர்ந்து நடந்து வருகிறது.. எங்க ஊருக்கு சூர்யா வந்தால், நாங்கேளே அவரை அடிப்போம், 1 லட்சம் ரூபாய்கூட எங்களுக்கு வேண்டாம் என்று சில பாமகவினர் ட்வீட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், மீண்டும் பாமகவை காட்டமாக விமர்சித்து, அறிவுறுத்தி உள்ளார் திருமாவளவன்.

அச்சுறுத்தல்
ஆங்கில டிவி சேனலுக்கு ஒன்றிற்கு திருமாவளவன் அளித்த பேட்டியில்,"பாமக தனது அரசியல் அடித்தளத்தை இழக்கும் போதெல்லாம், அவை சர்ச்சையை உருவாக்குகின்றன... அவர்கள் சூர்யாவை அச்சுறுத்தவில்லை, மாறாக இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாகவே உள்ளது.. தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பாமகவை எதிர்க்கின்றன.. மிரட்டல் விடுக்கும் இதுபோன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திருமாவளவன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications