Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதி கோரியுள்ளது. அதற்கு திமுக மறுத்துள்ளது. இதையடுத்து நேற்று முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது திருமாவளவனை, ஸ்டாலின் சமாதானம் செய்துள்ளதாகவும், விசிகவிற்கு 6 + 1 என தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற ள்ளது. மே 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

dmk vck tamil nadu assembly election 2026

திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. திமுக - விசிக உடன் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

விசிகவின் நிலைப்பாடு

விசிக சார்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கோரப்பட்டது. விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. அதோடு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 4 இடங்களில் வெற்றியும் பெற்றது. இதனால் தங்களுக்கு எந்த வகையிலும் தொகுதியை குறைக்க கூடாது என்று விசிக விரும்புகிறது. அதுமட்டுமின்றி கூட்டணிக்கு புதிதாக வந்த தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் உடன் 6 முதல் 8 தொகுதியை திமுக வழங்க முன்வந்துள்ளது. இதனால் தேமுதிகவை விட குறைந்த தொகுதியை பெறக்கூடாது என்று விசிக உறுதியாக இருந்தது.

திருமா - ஸ்டாலின் சந்திப்பு

ஆனால் திமுகவே விசிகவிற்கு கடந்த முறையே போல் 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதனால் திமுக - விசிக கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே தான் நேற்றைய தினம் விசிக தலைவர் தொல் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தொல் திருமாவளவன் தரப்பில், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது

சமாதானம் செய்த ஸ்டாலின்

இதனை முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. அதோடு திருமாவளவனை, ஸ்டாலின் சமாதானம் செய்துள்ளார். திமுக கூட்டணியில் புதிதாக வந்துள்ள கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதை எடுத்து கூறி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு விசிக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

6 + 1 என விசிக - திமுக டீல்?

அதன்படி தொல் திருமாவளவன் - ஸ்டாலின் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் விசிகவிற்கு தமிகழகத்தில் கடந்த முறையை போல் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் ஒரு சட்டசபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 (தமிழ்நாடு) + 1 (புதுச்சேரி) என்று மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக தற்போது வரை திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் 6+ 1 என்ற முறையில் திமுக- விசிக இடையே இன்று அல்லது நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

விசிகவிற்கு பின் தேமுதிக

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தேமுதிகவுடன், திமுக பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக புதிய கட்சியாகும். ஏற்கனவே தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கி உள்ளது. இப்படியான சூழலில் தேமுதிக சார்பில் இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதி கேட்கப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் 6 முதல் 8 தொகுதிகள் வரை மட்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் அதிருப்தி

அதேபோல் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் திமுக தரப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டால் இரண்டு முதல் மூன்று இடங்களை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆனால், மக்கள் நீதி மய்யம் தனது சொந்த சின்னமான 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட ஆர்வமாக உள்ளது. இதனால் நேற்று நடந்த 2வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று மாலையில் தனது நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இதுவரை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), மனிதநேய மக்கள் கட்சி (MMK) மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (KMDK) ஆகியவற்றுக்கு தலா 2 இடங்களும், மதிமுகவிற்கு 4 இடங்களும் (இதில் 3 பேர் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுவர்) ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 43 இடங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+