கார் இருந்தும் நான் ஏன் கேட்டேன்? காலணிக்கு வழியில்லாத, 85 லட்சத்திற்கு அதிபதி VCK ஜோதிமணி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னிடம் கார் இருந்தும் நான் ஏன் கார் கேட்டேன் என்பதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி விளக்கியுள்ளார். இவரது விளக்கத்தை விட இவரது சொத்து மதிப்புதான் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஜோதிமணி கூறியிருப்பதாவது: எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை முதல்வர் ஏற்று அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி. அது போல் என்னிடம் உள்ள கார் வாங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

VCK MLA Jothimani

தற்போது அது உபயோகத்தில் இல்லை. அதை விற்கவும் இல்லை. லோன் போட்டு கார் வாங்க ஆசையாக இருக்கிறது. ஆனால் 70 வயதாகிவிட்டதால் வங்கியில் லோன் தர மறுக்கிறார்கள். அதனால்தான் புதிய கார் வழங்குமாறு கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அரசியல் கட்சியினரோ அண்மையில் அந்த காரை ஜோதிமணி விற்றுவிட்டார் என்கிறார்கள். ஆனால் அவரோ விற்கவில்லை என்கிறார்.

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து நான் சட்டசபைக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி, வாகனம் கிடையாது.

வாடகை வண்டியில்தான் வருகிறேன். செருப்பு வாங்கக் கூட வழியில்லாத எளிய பின்னணியில் இருக்கிறேன். தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. ஒரு செயலாளரை உடன் வைத்துக் கொண்டு ஊதியம் கொடுக்கவும் வசதி இல்லை.

இப்படித்தான் முக்கால்வாசி சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வாகன வசதியும் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படி ரூ 75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

செருப்பு வாங்க கூட வசதியில்லை என கூறியிருந்த விசிக ஜோதிமணியிடம் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பார்க்கலாம். விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனது பிரமாண பத்திரத்தில் டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் மதிப்பு 9 லட்சம் ஆகும்.

அசையும் சொத்து ரூ 35 லட்சம் மதிப்பிலும் அசையா சொத்து ரூ 50 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 85 லட்சம் மதிப்பிலான சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் தனது மனைவி பெயரில் 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+