Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீரங்கியாக வெடித்த பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்! பேக் அடித்த விசிக! எம்பி ரவிக்குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக கடன் பெற்றிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவு தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி கருத்தை வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக விசிக எம்பி ரவிக்குமார், பிரவீன் மீது, ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதாக தகவல் பரவியது. இதை ரவிக்குமார் தற்போது மறுத்திருக்கிறார்.

"பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க நான் கோரவில்லை. எனது கருத்து திரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. பிரவீன் சக்கரவர்த்தி தொடர்பான விஷயங்கள் உட்கட்சி விவகாரம்" என்று தெரிவித்திருக்கிறார்.

VCK Tamil Nadu Congress

பிரச்சனை என்ன?

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியா கூட்டணி உறுதியாக இருப்பதாக கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள், கூட்டணிக்குள் பிளவு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து பஞ்சாயத்தை கூட்டியது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைவிட, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக ஆளும் தமிழ்நாடுதான் அதிக கடனை வாங்கி குவித்திருக்கிறது என்று பேசியிருந்தார். காங்கிரஸ் பெரிய தலைகள் இப்படி ஏழரையை கூட்டுவது வழக்கமானதுதான்.

வெடித்த பஞ்சாயத்து

ஆனால், பிரவீன் சக்கரவர்த்தி இந்த கருத்தை தெரிவிப்பதற்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்திருந்தார். எனவே இந்த கருத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின. திமுக கூட்டணி தலைவர்கள் சக்கரவர்த்தியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பஞ்சாயத்து வெடித்து கிளம்பியது. கூட்டணி தலைவர்கள் லைனில் வந்து கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கூட்டணி தலைவர்கள்

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகததிற்கு பேட்டியளித்த, துரை வைகோ "பிரவீன் தொடர்ந்து கூட்டணிக்கு எதிராகப் பேசுவது இணக்கமான சூழலை சீர்குலைப்பதாக உள்ளது. இவரின் செயல்கள் கூட்டணிக் கட்சிகளின் நலன்களுக்கு எதிரானவை. இவை காங்கிரஸ் உள்நோக்கத்துடன் செய்கிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றன. பாஜகவை பிரவீன் தூண்டிவிடுகிறார். கூட்டணி நலன் கருதி ராகுல் தலையிட்டு அவரை நிறுத்த நிறுத்த வேண்டும்" என கொந்தளிக்க.. "பிரவீன் விவகாரம் கவலைக்குரியது என்றாலும், தேர்தல் செயல்பாட்டைப் பாதிக்காது. ஆனால் காங்கிரஸ் இதை சரிசெய்ய வேண்டும்" என சிபிஎம் சண்முகம் வலியுறுத்தி இருந்தார்.

கண்டுக்கொள்ளாத கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வீரபாண்டியன், "எங்கள் கூட்டணி சித்தாந்தம் சார்ந்தது. இதுபோன்ற சிறிய பிரச்சினைகளால் பாதிக்கப்படாது. பல கட்சிக் கூட்டணியில் இவை சாதாரணம். காங்கிரஸ் இதை சரிசெய்யும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரவிக்குமார் பேசியது என்ன?

இதை தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு பேட்டியளித்த விசிக எம்பி ரவிக்குமார், "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிக வலிமையானது. எங்கள் முதலமைச்சர் கூட்டணி வலுவாக இருப்பதற்கான முக்கிய காரணம். திமுக கூட்டணியில் சிக்கல் எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதை ராகுல் அனுமதிக்கக்கூடாது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான ராகுலின் உறுதியான எதிர்ப்பு பாராட்டக்குரியது. எனினும் பிரவீன் போன்றவர்கள் ராகுலின் ஆர்எஸ்எஸ் எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அவரை பலவீனப்படுத்துகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

விளக்கம்

கூட்டணி தலைவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி உள்ளிட்டோரும் பிரவீனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், கூட்டணி கட்சிகளின் கருத்துகளுக்கு காங்., எம்பி மாணிக்கம் தாகூர் கண்டம் தெரிவித்திருந்தார். "எங்க கட்சி ஆளை அடக்க சொல்கிறார்கள். அதேபோல கூட்டணி கட்சிக்குள் இருந்து பேசும் நபர்களை நாங்கள் அடக்க சொன்னால் நல்லா இருக்குமா?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பி, லட்சுமண ரேகையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இப்படி இருக்கையில்தான், தன்னுடைய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் விளக்கமளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+