பைக்கில் இடித்த திருமாவின் கார்.. ஏன் என கேள்வி கேட்டவரை விரட்டி விரட்டி தாக்கிய விசிகவினர்- வீடியோ
சென்னை: சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனின் கார் பைக் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பைக்கில் இருந்தவர் யாரு அது? காரை விட்டு இறங்கு என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த திருமாவளவனின் ஆதரவாளர்கள் பைக்கில் சென்ற நபரை தாக்கி அவரது பைக்கை சாலையில் கீழே தள்ளி அட்டூழியம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் பிஆர் கவாய். இவர் மீது நேற்று ராகேஷ் கிஷோர் (வயது 71) என்பவர் காலணி வீசினார். அதிர்ஷ்டவசமாக பிஆர் கவாய் மீது காலணி படவில்லை. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திருமாவளவன் பங்கேற்றார்.
திருமாவளவன் மேடையில் பேசும்போது, ‛‛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாயை நோக்கி காலணி வீசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியதோடு சம்பவத்தை கண்டித்தும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு திருமாவளவன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது சிறிது நேரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் லேசாக இடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக் ஓட்டுநர் நடுரோட்டில் பைக்கை நிறுத்தினார். மேலும் காரை நோக்கி வந்து யாரு அது? காரை விட்டு இறங்கு? என்று கூறினார். அப்போது திருமாவளவனுக்கு பின்னால் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த பைக் ஓட்டுநரை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த விசிகவினர் அந்த நபரை தாக்கினர். மேலும் அவர் நிறுத்தியிருந்த பைக்கை சாலையில் தள்ளிவிட்டனர். இதில் பைக் சேதமானது. மேலும் ஆத்திரம் அடங்காதவர்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கினர். இந்த சம்பவம் போலீசார் கண்முன்னே நடந்தது. போலீசார் தடுக்க முயன்ற முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் திருமாவளவன் ஆதரவாளர்கள் பைக் ஓட்டுநரை விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru @thirumaofficial.
— K.Annamalai (@annamalai_k) October 7, 2025
Ironically, what makes it worse is that Thiru @thirumaofficial… pic.twitter.com/ZOk8fm9gm9
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பட்டப்பகலில் கார் டிரைவர் பைக்கில் இடித்ததால் அதன் டிரை்வர் கேள்வி கேட்டார். இதனால் விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கி உள்ளனர். அந்த காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்தார். இதில், முரண்பாடு என்னவென்றால் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து ஒரு போராட்டத்தில் பங்கேற்று திரும்பி வந்தபோது நடந்துள்ளது'' என்று கூறினார்.
-
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications