இது யாருடைய அஜென்டா.. எதுக்கு இந்த மீடியேட்டர் வேலை.. செல்வப்பெருந்தகை மீது வன்னி அரசு விமர்சனம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது.
திமுக கூட்டணியில் விசிக - பாமக ராமதாஸ் அணியை இணைப்பது தொடர்பாக செல்வப்பெருந்தகை வைத்த கருத்து விசிக தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள வன்னி அரசு, செல்வப்பெருந்தகைக்கு எதற்கு இந்த மீடியேட்டர் வேலை. முதலில் அவர் கட்சியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. மிகவும் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பரபரப்பு நிலவி வருகிறது. ஒருபக்கம் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் பிரச்சனையை பாருங்கள்
திமுக கூட்டணியில் ராமதாஸின் பாமக அணி இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே விசிக, பாமக பிரச்சனை பேசினால் தீரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இது நாங்கள் 14 வருடங்களுக்கு முன்பு எடுத்த முடிவு. இதற்கு இலவச ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்று விசிக ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்டது.
இந்நிலையில் செல்வப்பெருந்தகைக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையான விமர்சனங்களால் பதிலடி கொடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், "காங்கிரஸ் கட்சியில் நிறைய குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பிரச்சனைகள் உள்ளன. சொந்தக் கட்சி பிரச்சனையை செல்வப்பெருந்தகை தீர்க்க முயன்றால் அது அவர்களின் கட்சிக்கு நல்லது. நல்ல நோக்கம் இருந்தால் அதைப்பற்றி பேசலாம்.
செல்வப்பெருந்தகை நோக்கம் சரியல்ல
செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை என்று நான் நினைக்கிறேன். தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தபோது செல்வப்பெருந்தகை போராட்டம் நடத்தியுள்ளாரா. மக்களின் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் திடீரென்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை திமுகவும் ஏற்காது. கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும். அதை அவரோ அல்லது நாங்களோ முடிவு செய்ய முடியாது.
தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர் இப்படி பேசியிருக்கிறார். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. மக்களுக்காக எதையும் செய்யாமல் இப்போது பேசுவது விளம்பர அரசியல் ஸ்டண்ட் ஆகும். செல்வப்பெருந்தகைக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை என்று தெரியவில்லை. திருமாவளவனுக்கு ஆலோசனை சொல்லுமளவுக்கு செல்வப்பெருந்தகை வளரவில்லை. அவருக்கு ஏதாவது சாதியவாதிகள் இந்த அஜென்டா கொடுத்தார்களா என தெரியவில்லை.
இது எங்கள் முடிவு
சாதியவாதிகளை இணைப்பது எப்படி நல்ல நோக்கமாக இருக்க முடியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்துதான் திருமாவளவன் இந்த முடிவு எடுத்துள்ளார். சாதியத்தால் கடை கோடி மக்கள் பாதிக்கப்பட்டதால், எங்களின் கோட்பாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் முடிவில் தலையிடுவது சரியல்ல. அவர் கட்சி பிரச்சனைகளை சரி செய்வது, அவருக்கும் அந்த தொண்டர்களுக்கும் நல்லது. அடுத்த கட்சி பிரச்சனையை பற்றி பேசுவது ஏற்புடையதல்ல" என்றார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications