பசியை உணரும் உன்னத மாதமான ரமலான்! சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு வைக்கும் திருமாவளவன்!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நோன்பு வைத்து வருகிறார்.
திருமாவளவன் நேற்றும், இன்றும் 2 நாட்களாக நோன்பு வைத்த நிலையில், இன்னும் 3 நாட்கள் அவர் நோன்பு பிடிப்பார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவை தெரிவிக்கிறது.
திருமாவளவனை பொறுத்தவரை இந்தாண்டு 19-வது ஆண்டாக அவர் நோன்பு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம்.
மேலும், பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 18 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வந்த நிலையில், 19-வது ஆண்டாக இந்தாண்டும் நோன்பு வைத்து வருகிறார்.

மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவன் நோன்பு நோற்கும் நாட்களில் சென்னையில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் தான் சஹர் சாப்பாடு (அதிகாலை உணவு) உட்கொள்வார். அவருடன் சஹர் உணவை சாப்பிடுவதற்காக ஒரு பெரும் படையே குவிவது வழக்கம்.
அதேபோல் தன்னுடன் சேர்ந்து மாலையில் நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும், தமிழறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் திருமா அழைப்பது வழக்கம்.

இதனிடையே திருமாவளவன் நேற்று முதல் நாளாக நோன்பு வைத்த நிலையில் சஹர் உணவை அபு பேலஸ் ஹோட்டலில் சாப்பிட்டார். அவருடன் ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவை செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் சஹர் உணவு சாப்பிட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நோன்பு வைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி சென்ற திருமாவளவன் அங்கே விசிக மாநாட்டில் கலந்துகொண்டதோடு 2வது நாள் நோன்புக்கான சஹர் உணவை அங்கேயே சாப்பிட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications