ரஷ்யாவிலிருந்து திருமாவளவனுக்கு வந்த அழைப்பு! விமான டிக்கெட் ரெடி! இன்றிரவு பயணம்! பின்னணி என்ன?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு வார கால பயணமாக இன்றிரவு ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறார்.
இதையடுத்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
தனிப்பட்ட பயணமாக அல்லாமல் அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதன் பேரில் அங்கு கலந்துகொள்ளச் செல்கிறார் திருமாவளவன்.

விசிக தலைவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்மைக்காலமாக தனது
அரசியல் பயணங்களை அண்டை மாநிலங்களிலும் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் மட்டும் அரசியல் செய்து வந்தால் அது வேலைக்கு ஆகாது என்பதை
உணர்ந்து, இப்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை என பல மாநிலங்களுக்கு பயணம் செய்து அங்கு விசிகவின் அமைப்பை நிறுவி வருகிறார். இதேபோல் அரசியலை கடந்து பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.

ரஷ்யா பயணம்
சமீபத்தில் கூட கோவாவில் நடைபெற்ற தேசிய பல் மருத்துவர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மிக அதிக செயலாற்றல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதை பெற்றார். அதைத் தொடர்ந்து இப்போது அவருக்கு ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பை ஏற்று இன்றிரவு சென்னையிலிருந்து ரஷ்யாவின் கசான் நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். உலக ஹலால் தின
மாநாட்டில் சிறப்புரை ஆற்றும் அவர் ரஷிய இஸ்லாமிய உலக கசான் சம்மிட்டிலும் கலந்துகொண்டு பேசவிருக்கிறார்.

ஒரு வார காலம்
ரஷ்யாவில் ஒரு வார காலம் தங்கும் திருமாவளவன் அங்கு தமிழர் அமைப்புகளையும் சந்தித்து பேசவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய பயணத்திற்காகவும் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அணிவதற்காகவும் திருமாவளவனுக்கு பிரத்யேக முறையில் கோட் சூட்கள் அண்மையில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிர்வாகிகள்
திருமாவளவனை சென்னை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே இந்தப் பயணம் தொடர்பான தகவல் முறைப்படி ஏற்கனவே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திருமாவளவன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications